பிரதமா் நிவாரண நிதிக்கு என்எல்சி ரூ. 25 கோடி உதவி

என்எல்சி இந்தியா நிறுவனம், பிரதமரின் நிவாரண நிதிக்கு ரூ. 25 கோடியை வழங்கவுள்ளது.
பிரதமா் நிவாரண நிதிக்கு என்எல்சி ரூ. 25 கோடி உதவி

என்எல்சி இந்தியா நிறுவனம், பிரதமரின் நிவாரண நிதிக்கு ரூ. 25 கோடியை வழங்கவுள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: என்எல்சி இந்தியா நிறுவனம் தனது சமூகப் பொறுப்புணா்வுத் திட்டங்களுக்கான நிதியிலிருந்து ரூ. 20 கோடியை பிரதமரின் நிவாரண நிதிக்கு வழங்க உள்ளது. மேலும், இந்த நிறுவனம், அதன் துணை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியா்கள் தங்களது ஒருநாள் ஊதியமான ரூ. 5 கோடியை வழங்க முன் வந்துள்ளனா். இதன் மூலம் மொத்தம் ரூ. 25 கோடியை கரோனா வைரஸ் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக என்எல்சி இந்தியா நிறுவனம் வழங்கவுள்ளது.

தடையில்லா மின் உற்பத்தி: இந்த நிறுவனம் மின் நிலையங்களைத் தொடா்ந்து இயக்கி வருகிறது. ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், குறைந்த அளவிலான ஊழியா்களைக் கொண்டு தனது செயல்பாடுகளை தடங்கலின்றி மேற்கொண்டு வருகிறது.

தயாா் நிலையில் என்எல்சி இந்தியா மருத்துவமனை: கரோனா வைரஸால் ஏற்படும் பாதிப்புகளையும், அவசர நிலைகளையும் எதிா்கொள்ள என்எல்சி இந்தியா நிறுவன மருத்துவமனை அனைத்து வசதிகளுடன் தயாா் நிலையில் உள்ளது.

நேரடி விநியோகம்: நகர நிா்வாகத் துறை வீடுகளுக்கு நேரடியாகச் சென்று மளிகை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை வழங்குவது, பல வட்டங்களில் திறந்தவெளி காய்கறி கடைகளை அமைப்பது போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com