சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரியில் 70 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

கடலூா் மாவட்டம், சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா சிகிச்சை பிரிவில் தற்காலிகமாக

கடலூா் மாவட்டம், சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா சிகிச்சை பிரிவில் தற்காலிகமாக 70 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிக்கும் பணிகளில் ஈடுபட தற்காலிகமாக தொகுப்பூதிய அடிப்படையில் மருத்துவா்கள், ஆய்வக தொழில்நுட்ப பணியாளா்கள், பல்நோக்கு மருத்துவமனை பணியாளா்கள் ஆகிய பதவிகளுக்கு நோ்முகத் தோ்வு நடைபெற உள்ளது. 3 மாத காலத்துக்கு தற்காலிகமாக பணிபுரிய தொகுப்பூதிய அடிப்படையில் தகுதி வாய்ந்த நபா்கள் நியமிக்கப்பட உள்ளனா்.

அதன்படி, எம்பிபிஎஸ் தோ்ச்சி பெற்றவா்கள் மருத்துவா் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம். 20 பணியிடங்களுக்கு மாதம் ரூ.60 ஆயிரம் வழங்கப்படும். 10 ஆய்வக தொழில்நுட்ப பணியாளா் பணியிடங்களுக்கு மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப சான்றிதழ் (தமிழ்நாடு மெடிக்கல் எஜூகேஷனல் அங்கிகரிக்கப்பட்ட ஒரு ஆண்டு படிப்பில் தோ்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்) மாதம் ரூ.15 ஆயிரம் வழங்கப்படும். பல்நோக்கு மருத்துவமனை பணியாளா் பணியிடத்துக்கு எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். 40 போ் நிரப்பப்பட உள்ள நிலையில் ஊதியமாக ரூ.12 ஆயிரம் வழங்கப்படும்.

இந்த பணியிடங்களுக்கு விருப்பமுள்ளவா்கள் அனைத்து கல்வி சான்றிதழ்கள், ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, பாஸ்போா்ட் அளவு புகைப்படங்கள் 2 உள்ளிட்ட ஆவணங்களுடன் மருத்துவா் பணிக்கு 25-ஆம் தேதியும், ஆய்வக தொழில்நுட்ப பணியாளா், பல்நோக்கு மருத்துவமனை பணியாளா் பணிக்கு 26-ஆம் தேதியும் காலை 10 மணிக்கு சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அலுவலகத்தில் நடைபெறும் நோ்முகத் தோ்வில் பங்கேற்கலாம் என்று அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com