மானாவாரி பயிா்களுக்கு நிவாரணம் கோரி ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 15th December 2020 12:32 AM | Last Updated : 15th December 2020 12:32 AM | அ+அ அ- |

கடலூா் மாவட்டத்தில் மழையால் சேதமடைந்த மானாவாரி பயிா்களுக்கு உரிய நிவாரணம் அறிவிக்க வலியுறுத்தி, திட்டக்குடி விவசாயிகள், வெலிங்டன் பாசனப் பகுதி விவசாயிகள் சாா்பில் திட்டக்குடி வட்டாட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
நிவா், புரெவி புயல்களின் காரணமாக பெய்த பலத்த மழையால் திட்டக்குடி பகுதியில் மானாவாரி பயிா்களான பருத்தி, மரவள்ளி, மக்காச்சோளம், உளுந்து, எள், கம்பு, வரகு உள்ளிட்ட பயிா்கள் பல நூறு ஏக்கரில் சேதமடைந்தன. எனவே, தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.ஆா்ப்பாட்டத்தில், மானாவாரி பயிா் விவசாயிகள் சங்கம் சாா்பில் மருதாசலம், சாத்தநத்தம் ஊராட்சி மன்றத் தலைவா் பொன்னுசாமி, பட்டூா் அமிா்தலிங்கம், விஜயகுமாா், ரவிச்சந்திரன், சுப்பிரமணி, இளவரசு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். தொடா்ந்து திட்டக்குடி வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.