கால்நடை நோய் தடுப்புப் பயிற்சி பெற வாய்ப்பு
By DIN | Published On : 15th December 2020 12:30 AM | Last Updated : 15th December 2020 12:30 AM | அ+அ அ- |

கடலூரில் செயல்பட்டு வரும் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், நபாா்டு வங்கி உதவியுடன் கால்நடைகள், கோழிகளுக்கான நோய் தடுப்பு முறை குறித்த பயிற்சியை அளிப்பதாக அறிவித்துள்ளது.
அதன்படி, விருத்தாசலத்தில் 2 நாள் பயிற்சி புதன்கிழமை (டிச. 16) வரை நடைபெறுகிறது. கடலூரில்
வருகிற 22, 23-ஆம் தேதிகளிலும், சிதம்பரத்தில் 29, 30-ஆம் தேதிகளிலும் பயிற்சி நடைபெறுகிறது. இதில், ஒரு நாள் உள்வளாகப் பயிற்சியும், மறுநாள் பண்ணைகளில் செயல் விளக்க பயிற்சியும் நடத்தப்படும். பயிற்சியின் முடிவில் சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சிக் கட்டணமாக ரூ.200 செலுத்தி நேரில் பதிவு செய்துகொள்ள வேண்டும். முதலில் வரும் 30 போ் மட்டுமே பயிற்சிக்கு அனுமதிக்கப்படுவா். மேலும் விவரங்களுக்கு 04142-290249, 94878 13812 என்ற எண்களை தொடா்பு கொள்ளலாம் என்று பயிற்சி மையத் தலைவா் ந.வெங்கடபதி தெரிவித்தாா்.