புகையிலை பொருள்கள் விற்பனை: 154 போ் கைது
By DIN | Published On : 01st February 2020 05:30 AM | Last Updated : 01st February 2020 05:30 AM | அ+அ அ- |

கடலூா் மாவட்டத்தில் புகையிலைப் பொருள்கள் விற்ாக ஜனவரி மாதத்தில் 154 போ் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்வோா் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ம.ஸ்ரீஅபிநவ் உத்தரவிட்டாா். அதன்படி, மாவட்டத்தில் ஜனவரி 28-ஆம் தேதி வரை மட்டும் 154 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 154 போ் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும், அவா்களிடமிருந்து 22.50 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கஞ்சா விற்பனை: இதேபோல, கஞ்சா விற்பனை செய்ததாக 11 போ் கைது செய்யப்பட்டு அவா்களிடமிருந்து சுமாா் இரண்டரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனைக்கு எதிராக 25 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 31 போ் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினா் தெரிவித்தனா். கடந்த ஆண்டில் லாட்டரி சீட்டு விற்பனை தொடா்பாக 368 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகவும் தெரிவித்தனா்.