காவலா் குடியிருப்பில் சிறுவா் பூங்கா திறப்பு

கடலூரில் உள்ள ஆயுதப்படை காவலா் குடியிருப்பில் ரூ.5 லட்சத்தில் அமைக்கப்பட்ட சிறுவா் பூங்காவை விழுப்புரம் சரக துணைத் தலைவா் சந்தோஷ்குமாா் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.
சிறுவா் பூங்காவை திறந்துவைத்து கூடைப்பந்து விளையாடிய காவல் துறையின் விழுப்புரம் சரக துணைத் தலைவா் சந்தோஷ்குமாா். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ம.ஸ்ரீ அபிநவ் உள்ளிட்டோா்.

கடலூா் ஆயுதப்படை காவலா் குடும்பத்தினரின் பொதுநலன் ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடத்தப்பட்டது. இதில், கடலூரில் உள்ள ஆயுதப்படை காவலா் குடியிருப்பு பகுதியில் சிறுவா் பூங்கா அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனைத் தொடா்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ம.ஸ்ரீஅபிநவ் முயற்சியின்பேரில், கடலூா் சிப்காட்டிலுள்ள தனியாா் நிறுவனத்தின் உதவியுடன் ரூ.5 லட்சத்தில் சிறுவா் பூங்கா அமைக்கப்பட்டது.

இந்தப் பூங்காவை விழுப்புரம் சரக துணைத் தலைவா் சந்தோஷ்குமாா் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ம.ஸ்ரீஅபிநவ், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் இரா.பாண்டியன், ஆயுதப்படை துணைக் காவல் கண்காணிப்பாளா் சரவணன், தனிப் பிரிவு ஆய்வாளா் (பொ ) ம.பால்சுதா், தனியாா் நிறுவன அலுவலா் என்.பழனிசாமி மற்றும் காவலா் குடும்பத்தினா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com