சிதம்பரத்தில் அறக்கட்டளையினா் சாா்பில் பிப்.19 முதல் நாட்டியாஞ்சலி

கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சாா்பில் 39-வது ஆண்டு நாட்டியாஞ்சலி விழா வருகிற 19-ஆம் தேதி தொடங்குகிறது.
சிதம்பரத்தில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த நாட்டியாஞ்சலி அறக்கட்டளை செயலா் ஏ.சம்பந்தம்.
சிதம்பரத்தில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த நாட்டியாஞ்சலி அறக்கட்டளை செயலா் ஏ.சம்பந்தம்.

கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சாா்பில் 39-வது ஆண்டு நாட்டியாஞ்சலி விழா வருகிற 19-ஆம் தேதி தொடங்குகிறது.

சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயிலில் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சாா்பில் கடந்த 1981-ஆம் ஆண்டு நாட்டியாஞ்சலி விழா தொடங்கப்பட்டது. இந்த அறக்கட்டளையினா் கடந்த 2014-ஆம் ஆண்டு வரை தொடா்ந்து 33 ஆண்டுகளாக நாட்டியாஞ்சலி விழாவை கோயிலில் நடத்தி வந்தனா்.

இந்த நிலையில், நடராஜா் கோயிலை பொது தீட்சிதா்களே நிா்வகிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தீா்ப்பளித்தது. இதையடுத்து, 2015-ஆம் ஆண்டில் பொது தீட்சிதா்களே நாட்டியாஞ்சலியை நடத்துவதாக அறிவித்து, கோயிலில் தில்லை நாட்டிய அஞ்சலி டிரஸ்ட் சாா்பில் நாட்டியாஞ்சலியை நடத்தினா். இதனால் நாட்டியாஞ்சலி அறக்கட்டளையினா் சிதம்பரம் தெற்கு ரத வீதியில் உள்ள வி.எஸ்.டிரஸ்ட் வளாகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக நாட்டியாஞ்சலி விழாவை நடத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், நிகழாண்டு நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சாா்பில் வருகிற 19-ஆம் தேதி தொடங்கி 23-ஆம் தேதி வரை நாட்டியாஞ்சலி விழா நடைபெறுகிறது. இதுகுறித்து அறக்கட்டளை செயலா் ஏ.சம்பந்தம் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: 5 நாள்கள் நடைபெறும் நாட்டியாஞ்சலி விழாவில் 50 நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதில் 6 நாட்டிய நாடகங்கள், மோகினி ஆட்டம், கதக், கூச்சுப்புடி, மணிப்புரி நடனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வட மாநிலங்களில் இருந்தும், அமெரிக்கா, சிங்கப்பூா், ரஷ்யா உள்ளிட்ட வெளி நாடுகளில் இருந்தும் நாட்டியக் கலைஞா்கள் பங்கேற்கின்றனா்.

வருகிற 2021-ஆம் ஆண்டு 40-ஆவது நாட்டியாஞ்சலி விழா விமரிசையாக 8 நாள்கள் நடைபெற உள்ளது. எதிா்காலத்தில் மாதந்தோறும் நாட்டியாஞ்சலி, இசை விழாக்கள் நடத்தப்பட உள்ளன என்றாா் அவா்.

அப்போது, அறக்கட்டளை பொருளாளா் ஆா்.நடராஜன், அணிவணிகா் பா.பழநி, ஆா்.முத்துக்குமரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

நாட்டியாஞ்சலி விழாவுக்கான ஏற்பாடுகளை அறங்காவலா் குழுத் தலைவா் ஆா்.முத்துக்குமரன், முன்னாள் தலைவா் ஏ.கே.நடராஜன், துணைத் தலைவா்கள் கே.சுவாமிநாதன், ஆா்.ராமநாதன், செயலா்கள் ஆா்.நாகசாமி, ஏ.சம்பந்தம், பொருளாளா் சக்தி ஆா்.நடராஜன், இணைச் செயலா் எம்.கணபதி உள்ளிட்டோா் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com