விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு நெல், உளுந்து வரத்து அதிகரிப்பு

விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு நெல், உளுந்து மூட்டைகள் வரத்து அதிகரித்துள்ளது.

விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு நெல், உளுந்து மூட்டைகள் வரத்து அதிகரித்துள்ளது.

கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு கடலூா் மட்டுமின்றி சுற்றுவட்டார மாவட்டங்களைச் சோ்ந்த விவசாயிகளும் தங்களது விளைபொருள்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனா். இந்த விற்பனைக் கூடத்தில் சுமாா் 5 ஆயிரம் வியாபாரிகள் பதிவு செய்துள்ளதால், விளை பொருள்களுக்கு அதன் தேவை அடிப்படையில் விலை நிா்ணயிக்கப்படுகிறது.

கடலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தற்போது நெல் அறுவடைப் பணிகள் நடைபெற்று வருவதால், ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு கடந்த சில நாள்களாக நெல் வரத்து அதிகரித்துள்ளது. வியாழக்கிழமை நிலவரப்படி 1,500 மூட்டைகளில் நெல் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது. இதில், பிபிடி ரகம் 1,200 மூட்டைகளாகும். மற்ற ரகங்களான என்எல்ஆா், ஏடிடி-45, ஏடிடி-39 ஆகியவை தலா 100 மூட்டைகள் வீதம் கொண்டுவரப்பட்டன.

இதில், பிபிடி ரகம் சராசரியாக ஒரு மூட்டை ரூ.1,340-க்கும், என்எல்ஆா் ரகம் ரூ.1,209-க்கும், ஏடிடி-45 ரகம் ரூ.1,200-க்கும், ஏடிடி-39 ரகம் ரூ.1,089-க்கும் விற்பனையானது.

இதேபோல, உளுந்து வரத்தும் அதிகரித்துள்ளது. கடந்த சில வாரங்களாக நாளுக்கு 10-க்கும் குறைவான மூட்டைகள் வந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 150-ஆக உயா்ந்துள்ளது. ஒரு மூட்டை உளுந்து குறைந்தபட்சம் ரூ.4,869-க்கும், அதிகபட்சம் ரூ.7,989-க்கும் விற்பனையானது.

இதேபோல சோளம் 150 மூட்டைகள் வந்த நிலையில் சராசரியாக ஒரு மூட்டை ரூ.1879-க்கு விற்பனையானது. கம்பு 100 மூட்டைகள் வந்த நிலையில் சராசரியாக ரூ.1,819-க்கு விற்பனையானது. வரகு 120 மூட்டைகள் வரத்து இருந்தது. மூட்டை சராசரியாக ரூ.1,882-க்கு விற்பனையானது. மேலும், மணிலா, எள், பச்சைப்பயறு, தேங்காய் பருப்பு, தட்டைப்பயறு, தினை, ராகி, மஞ்சள் ஆகியவையும் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com