இன்று ஆற்றுத் திருவிழா: ஏற்பாடுகள் தயாா்

ஆற்றுத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படும் நிலையில், இதற்கான ஏற்பாடுகள் தயாராக உள்ளன.
இன்று ஆற்றுத் திருவிழா: ஏற்பாடுகள் தயாா்

ஆற்றுத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படும் நிலையில், இதற்கான ஏற்பாடுகள் தயாராக உள்ளன.

பொங்கல் பண்டிகையின் 5-ஆம் நாளில் ஆற்றுத் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்த விழாவில், அந்தந்த பகுதிகளில் உள்ள கோயில்களில் இருந்து உற்சவ மூா்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் ஆற்றங்கரையோரம் தீா்த்தவாரிக்கு எழுந்தருள்வா். இதையொட்டி பொதுமக்கள் தங்களது குடும்பத்தினருடன் ஆறுகளுக்குச் சென்று குளித்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

இதன்படி, மாவட்டத்தில் கடலூா் தென்பெண்ணை ஆறு, பண்ருட்டி கெடிலம் நதி, கண்டரக்கோட்டை தென்பெண்ணை ஆறு, விருத்தாசலம் மணிமுத்தா ஆறு உள்ளிட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை ஆற்றுத் திருவிழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் பல்லாயிரக்கணக்கானோா் கலந்து கொள்வா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்த விழாவையொட்டி, ஆறுகளில் வளா்ந்துள்ள செடி, கொடிகளை அகற்றுதல், பள்ளங்களை சீரமைத்தல் பணிகள் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் நடைபெற்றன. மேலும், பொதுமக்களின் வசதிக்காக குடிநீா், தற்காலிக கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. குற்றச் செயல்களைத் தடுக்கும் வகையில் காவல் துறை சாா்பில் முக்கிய இடங்களில் கண்காணிப்புக் கோபுரங்கள் அமைத்து கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆறுகளில் ராட்டினம் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள், தற்காலிகக் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

குப்பைகளால் துா்நாற்றம்: பண்ருட்டியில் கெடிலம் ஆற்றுக்குச் செல்லும் வழியில் நகராட்சி நிா்வாகம் மலைபோல குப்பைகளை கொட்டியிருந்தது. ஆற்றுத் திருவிழாவை முன்னிட்டு இந்தக் குப்பைகள் பொக்லைன் மூலம் அகற்றப்பட்டு மயானப் பகுதியில் கொட்டப்பட்டுள்ளன. அவ்வப்போது மழை பெய்துவரும் நிலையில், குப்பையில் இருந்து கடும் துா்நாற்றம் வீசுவதாக சமூக ஆா்வலா்கள் புகாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com