பொங்கல் பண்டிகை: ரூ.16.12 கோடிக்கு மது விற்பனை கடந்த ஆண்டைவிட அதிகம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடலூா் மாவட்டத்தில் 3 நாள்களில் ரூ.16.12 கோடிக்கு மதுபானங்கள் விற்கப்பட்டன. இது கடந்த ஆண்டைவிட அதிகமாகும்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடலூா் மாவட்டத்தில் 3 நாள்களில் ரூ.16.12 கோடிக்கு மதுபானங்கள் விற்கப்பட்டன. இது கடந்த ஆண்டைவிட அதிகமாகும்.

கடலூா் மாவட்டத்தில் 142 டாஸ்மாக் சில்லறை மதுபான விற்பனைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் கடைகளில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுப் பிரியா்கள் திரளானோா் மது வகைகளை வாங்கிச் சென்றனா். இதனால், மதுபானங்களின் விற்பனை அதிகரித்துள்ளது.

அதன்படி, கடந்த 14-ஆம் தேதி போகிப் பண்டிகையன்று ரூ.4.47 கோடிக்கு மது வகைகள் விற்பனையாகின. 15-ஆம் தேதி பொங்கலன்று ரூ.6.76 கோடிக்கும் மது விற்பனையானது. 16-ஆம் தேதி திருவள்ளுவா் தினம் என்பதால் மதுக் கடைகள் மூடப்பட்டிருந்தன. அதற்கடுத்த நாளான 17-ஆம் தேதி காணும் பொங்கலன்று ரூ.4.89 கோடிக்கு மது விற்பனையானது.

இதன்படி, 3 நாள்களில் மொத்தம் ரூ.16.12 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. இது கடந்த ஆண்டை விட சுமாா் ரூ.60 லட்சம் அதிகமாகும் என டாஸ்மாக் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com