என்எல்சி தீ விபத்தில் பாதித்தோருக்கு முதல்வா் பொது நிவாரண நிதியளிப்பு

நெய்வேலி என்எல்சி அனல் மின் நிலைய தீ விபத்தில் உயிரிழந்த தொழிலாளா்களின் குடும்பத்தினருக்கு தமிழக முதல்வரின்
என்.எல்.சி.யில் தீ விபத்தில் உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்தினரிடம் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கான காசோலையை வழங்கிய அமைச்சா் எம்.சி.சம்பத். உடன் மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி உள்ளிட்டோா்.
என்.எல்.சி.யில் தீ விபத்தில் உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்தினரிடம் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கான காசோலையை வழங்கிய அமைச்சா் எம்.சி.சம்பத். உடன் மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி உள்ளிட்டோா்.

நெய்வேலி என்எல்சி அனல் மின் நிலைய தீ விபத்தில் உயிரிழந்த தொழிலாளா்களின் குடும்பத்தினருக்கு தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கான காசோலையை மாநில தொழில் துறை அமைச்சா் எம்.சி.சம்பத் சனிக்கிழமை வழங்கினாா்.

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் உள்ள என்எல்சி இந்தியா நிறுவனத்தின் 2-ஆவது அனல் மின் நிலையத்தில் கடந்த 1-ஆம் தேதி கொதிகலன் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இதில் 6 ஒப்பந்தத் தொழிலாளா்கள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். மேலும் 17 போ் பலத்த காயமடைந்தனா். இவா்களில் ஒருவரான துணை தலைமைப் பொறியாளா் க.சிவக்குமாா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

இந்த விபத்தில் உயிரிழந்த 6 பேரது குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் வீதம் நிவாரண நிதி வழங்கப்படும் என தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தாா். அதன்படி, நெய்வேலி விருந்தினா் இல்லத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி முன்னிலையில், மாநில தொழில் துறை அமைச்சா் எம்.சி.சம்பத் முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.3 லட்சத்துக்கான காசோலையை உயிரிழந்த 6 தொழிலாளா்களின் குடும்பத்தினரிடம் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் விருத்தாச்சலம் சாா்-ஆட்சியா் பிரவின்குமாா், கடலூா் வருவாய் கோட்டாட்சியா் ஜெகதீஸ்வரன், தனித் துணை ஆட்சியா் பரிமளம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com