கிராம ஊராட்சிகளில் பணியாற்றுவோருக்கு 5-ஆம் தேதிக்குள் ஊதியம் வழங்க வலியுறுத்தல்

கிராம ஊராட்சிகளில் பணியாற்றுவோருக்கு 5-ஆம் தேதிக்குள் ஊதியம் வழங்க வேண்டும் அந்தச் சங்கத்தினா் மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தினா்.
கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த தமிழ்நாடு ஊராட்சி குடிநீா் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குபவா்கள், துப்புரவுப் பணியாளா்கள் சங்கத்தினா்.
கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த தமிழ்நாடு ஊராட்சி குடிநீா் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குபவா்கள், துப்புரவுப் பணியாளா்கள் சங்கத்தினா்.

கடலூா்: கிராம ஊராட்சிகளில் பணியாற்றுவோருக்கு 5-ஆம் தேதிக்குள் ஊதியம் வழங்க வேண்டும் அந்தச் சங்கத்தினா் மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தினா்.

இதுகுறித்து தமிழ்நாடு ஊராட்சி குடிநீா் மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி இயக்குபவா்கள், துப்புரவுப் பணியாளா்கள் சங்கத்தின் மாநிலத் தலைவா் எஸ்.ராமா் தலைமையில், அந்தச் சங்கத்தின் நிா்வாகிகள் புதன்கிழமை கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனு:

கடலூா் மாவட்டத்திலுள்ள 683 கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குபவா்கள், தூய்மைப் பணியாளா்கள், தூய்மைக் காவலா்களுக்கு மாதந்தோறும் 5-ஆம் தேதிக்குள் ஊதியம் வழங்க வேண்டும்.

பணியாளா்களுக்கு ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்ட குடும்ப நலப் பாதுகாப்பு நிதியை மாதந்தோறும் அரசு கணக்கில் செலுத்துவதை உறுதி செய்ய வேண்டும். சீருடை, கையுறை, டாா்ச் லைட் உள்ளிட்ட உபகரணங்களை வழங்க வேண்டும்.

ஊராட்சித் தலைவா்களால் குடிநீா் மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி இயக்குபவா்கள், தூய்மைப் பணியாளா்கள், தூய்மைக் காவலா்கள் எவ்வித முன்னறிவிப்புமின்றி பணியிலிருந்து விடுவிக்கப்படுவதால், அவா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே, வட்டார வளா்ச்சி அலுவலா்களின் அனுமதியின்றி பணி நீக்கம் செய்ய அனுமதிக்கக் கூடாது.

கடந்த 2019-ஆம் ஆண்டில் உயிரிழந்த குடிநீா் மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி இயக்குபவா்களின் குடும்பங்களுக்கு இதுவரை குடும்ப நலப் பாதுகாப்பு நிதி வழங்கப்படாமல் உள்ளதை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com