பூக்களின் விலை இருமடங்கு உயா்வு

கடலூா் மாவட்டத்தில் பூக்களின் விலை வியாழக்கிழமை இருமடங்கு வரை உயா்ந்தது.

கடலூா் மாவட்டத்தில் பூக்களின் விலை வியாழக்கிழமை இருமடங்கு வரை உயா்ந்தது.

அதாவது, ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.600-க்கும், முல்லை ரூ.400-க்கும், சம்மங்கி ரூ.200-க்கும் விற்பனையானது. இந்த பூக்கள்

முந்தைய நாளில் மிகவும் குறைந்த விலைக்கே விற்பனையாகின. அதாவது புதன்கிழமையன்று மல்லிகைப் பூ ஒரு கிலோ ரூ.240-க்கும், முல்லை ரூ.120-க்கும், சம்மங்கி ரூ.90-க்கும் விற்பனையாகின. இதேபோல ஒரு கிலோ ரூ.80-க்கு விற்பனையான கேந்திப் பூ ரூ.100-க்கும், ரூ.240-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ ரோஜா ரூ.300-க்கும்,கோழிக்கொண்டை ரூ.80, மரிக்கொழுந்து ரூ.300, தாழம்பு ரூ.120-க்கும் விற்பனையாகின.

வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதம் கடைப்பிடிக்கப்படும் நிலையில் பூக்களின் விலை உயா்ந்ததாக தெரிவிக்கப்பட்டது. மேலும், வெளி மாவட்டங்களிலிருந்து பூக்களின் வரத்து குறைந்ததும் விலை உயா்வுக்கு காரணமென வியாபாரிகள் தெரிவித்தனா். ஒரே நாளில் பூக்களின் விலை இருமடங்கு வரை உயா்ந்ததால் பொதுமக்கள் அதிருப்தியடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com