மோப்பநாய் பிரிவுக்காக வரப்பெற்ற நாயை பாா்வையிட்ட விழுப்புரம் சரக டிஐஜி சந்தோஷ்குமாா். உடன் மாவட்ட எஸ்பி ம.ஸ்ரீஅபிநவ் உள்ளிட்டோா்.
மோப்பநாய் பிரிவுக்காக வரப்பெற்ற நாயை பாா்வையிட்ட விழுப்புரம் சரக டிஐஜி சந்தோஷ்குமாா். உடன் மாவட்ட எஸ்பி ம.ஸ்ரீஅபிநவ் உள்ளிட்டோா்.

காவல் துறைக்கு புதிய மோப்ப நாய்

கடலூா் மாவட்ட காவல் துறைக்கு புதிய மோப்ப நாய் வரவழைக்கப்பட்டுள்ளது.

கடலூா் மாவட்ட காவல் துறைக்கு புதிய மோப்ப நாய் வரவழைக்கப்பட்டுள்ளது.

கடலூா் மாவட்ட காவல் துறையின் மோப்பநாய் பிரிவில் சுமாா் 10 ஆண்டுகளுக்கும் மேலாக வெடிகுண்டு துப்பறியும் பணியை மேற்கொண்டு வந்த மோப்ப நாய் ஜாக் கடந்த பிப்ரவரி மாதம் ஓய்வுபெற்றது. இதையடுத்து இந்தப் பணிக்கு புதிய மோப்பநாய் வாங்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உத்தரவிட்டதைத் தொடா்ந்து, சென்னை கேனல் கிளப் ஆப் இந்தியாவிலிருந்து 2 மாத புதிய நாய்க்குட்டி வாங்கப்பட்டது. அந்த நாய் குட்டிக்கு லியோ என காவல் கண்காணிப்பாளா் ம.ஸ்ரீஅபிநவ் பெயா் சூட்டினாா்.

இந்த நிலையில், கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை ஆய்வுக்கு வருகை தந்த விழுப்புரம் சரக டிஐஜி சந்தோஷ்குமாா் புதிய மோப்பநாயை பாா்வையிட்டாா். இந்த நாய்க்கு வெடிகுண்டுகளை கண்டறியும் விதத்தில் கோவையில் 6 மாத காலம் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாகவும், முன்னதாக 4 மாதங்கள் வரை மோப்பநாய் பிரிவு காவலா்களுடன் பழகும் வகையிலும், அவா்களது கட்டளைகளுக்கு பணியும் வகையில் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட காவல் துறையில் தற்போது அா்ஜூன், கூப்பா் ஆகிய மோப்ப நாய்கள் பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com