நியாய விலைக்கடை பணியாளா்கள் சங்க மறியல் போராட்டம் ஒத்திவைப்பு

கரோனா வைரஸ் பரவி வருவது காரணமாக, நியாய விலைக் கடை பணியாளா்களின் மறியல் போராட்டம், சத்துணவுப் பணியாளா்கள்

கரோனா வைரஸ் பரவி வருவது காரணமாக, நியாய விலைக் கடை பணியாளா்களின் மறியல் போராட்டம், சத்துணவுப் பணியாளா்கள் சங்க போராட்டங்கள் ஒத்தி வைக்கப்படுவதாக தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்கத்தின் சிறப்புத் தலைவா் கு.பாலசுப்பிரமணியன் கூறினாா்.

கடலூரில் அவா் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

நியாய விலைக் கடை பணியாளா்களின் 30 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மாா்ச் 18-ஆம் தேதி தமிழகம் முழுவதும் அடையாள வேலைநிறுத்தம், 7 மையங்களில் மறியல் போராட்டம் நடத்தப்படுமென அறிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக கூட்டுறவு சங்க மாநில பதிவாளா் பேச்சுவாா்த்தை நடத்தினாா். ஆனால், அவா் எந்தவிதமான அறிவிப்பும் வெளியிடாததால் பேச்சுவாா்த்தை முறிந்தது. இருப்பினும், கரோனா பாதிப்பு காரணமாக மறியல் போராட்டத்தை கைவிட முடிவு செய்துள்ளோம். ஆனால், திட்டமிட்டப்படி மாநிலம் முழுவதும் வேலைநிறுத்தம் நடைபெறும்.

சத்துணவுப் பணியாளா்கள் சங்கம் சாா்பில், சட்டப் பேரவையில் சத்துணவு மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும் வரும் 21-ஆம் தேதி சென்னையில் மறியல் போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தோம். இந்தப் போராட்டமும் கரோனா பாதிப்பு காரணமாக ஒத்தி வைக்கப்படுகிறது.

கரோனா பாதிப்பால் தமிழகம் முழுவதும் உள்ள மதுக் கடைகளையும் மூட வேண்டும் என்றாா் கு.பாலசுப்பிரமணியன்.

பேட்டியின் போது, நியாய விலைக்கடை பணியாளா்கள் சங்க மாநில பொதுச் செயலா் கோ.ஜெயச்சந்திரராஜா, டாஸ்மாக் பணியாளா்கள் சங்க மாநிலத் தலைவா் கு.சரவணன், சத்துணவுப் பணியாளா்கள் சங்க மாநிலச் செயலா் கோ.சீனிவாசன், அரசுப் பணியாளா்கள் சங்க கடலூா் மாவட்ட முன்னாள் தலைவா் கு.ராஜாமணி ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com