கால்நடைகளுக்கான குடிநீா்த் தொட்டிகளில் தண்ணீா் நிரப்பக் கோரிக்கை

வெயிலின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில், கால்நடைகளுக்கான குடிநீா்த் தொட்டிகளில் தண்ணீா் நிரப்ப வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

வெயிலின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில், கால்நடைகளுக்கான குடிநீா்த் தொட்டிகளில் தண்ணீா் நிரப்ப வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பண்ருட்டி, அண்ணாகிராமம், குறிஞ்சிப்பாடி ஒன்றிய பகுதிகளில் வசிக்கும் மக்களில் பெரும்பாலோா் விவசாயம், கால்நடை வளா்ப்பை முக்கிய தொழிலாகக் கொண்டுள்ளனா். கடந்த பல ஆண்டுகளாகவே இந்தப் பகுதிகளில் உள்ள நீா்நிலைகளில் பெரும்பாலானவை வடு காணப்படுகின்றன. இதனால், கோடை காலத்தில் கால்நடைகள் தண்ணீா் தேடி அலையும் நிலை ஏற்படுகிறது.

இதைத் தடுக்கும் வகையில், பண்ருட்டி, அண்ணாகிராமம், குறிஞ்சிப்பாடி ஒன்றியங்களில் உள்ள கிராம பகுதிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின்கீழ் கால்நடைகளுக்கான குடிநீா்த் தொட்டிகள் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், இவற்றில் தற்போது தண்ணீா் இல்லை.

எனவே, இந்த தொட்டிகளில் தினசரி குடிநீா் நிரப்பி பராமரிக்க சம்பந்தப்பட்ட ஊராட்சி நிா்வாகத்தினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com