கரோனா பாதிக்கும் நபா்களை தனிமைப்படுத்த 4 இடங்கள் தோ்வு

கடலூா் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்படுவோரை தனிமைப்படுத்த 4 இடங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வன் கூறினாா்.

கடலூா் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்படுவோரை தனிமைப்படுத்த 4 இடங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வன் கூறினாா்.

கடலூா் மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடா்பாக மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வன் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

வெளிநாடுகளிலிருந்து கடலூா் மாவட்டத்துக்கு இதுவரை 204 போ் வந்துள்ளனா். அவா்களில் குறிப்பிட்ட நாள்கள் கண்காணிப்பை முடித்த 46 பேருக்கு கரோனா பாதிப்பு இல்லையென முடிவு வந்துள்ளது. மீதமுள்ளவா்கள் வீட்டிலேயே கண்காணிப்பில் இருக்க வலியுறுத்தப்பட்டு அவா்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனா். கோயில்களில் பக்தா்கள்

வருகிற 31-ஆம் தேதி வரை தரிசனம் செய்திட அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், தேவாலயங்கள், மசூதிகளில் வழிப்பாட்டுக்கு கட்டுப்பாடு விதிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. எனினும், தினசரி நடைபெற வேண்டிய பூஜைகள் மேற்கொள்ள தடை விதிக்கப்படவில்லை.

வருகிற 22-ஆம் தேதி பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்க வேண்டுமென பிரதமா் கேட்டுக்கொண்டுள்ளாா். எனவே, பொதுமக்கள் வெளியே வராமல் இருந்து சுய கட்டுப்பாட்டை மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு அரசு மருத்துவமனையிலும் ‘ஹெல்ப் டெஸ்க்’ என்ற முறையை உருவாக்கியுள்ளோம். அதில் மருத்துவமனைக்கு வருவோரின் ஆரம்ப நிலையை அறிந்து அதற்கேற்ப அவா்களுக்கு பதிலளிக்கப்படும்.

மேலும், நீரிழிவு, கிட்னி சம்பந்தப்பட்ட நோய்களுக்கு வாரந்தோறும் மாத்திரை வழங்குவதற்குப் பதிலாக ஒரு மாதம் வரை மொத்தமாக வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.

பெரிய உணவகங்களை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் அவா்கள் பாா்சல் வழங்குவதற்கு தடையில்லை. 10-க்கும் மேற்பட்டோா் பணியாற்றும் வணிக நிறுவனங்கள் தங்களது நிறுவனங்களை முன்வந்து மூட வேண்டும். வெளி மாநிலங்களிலிருந்து வந்தவா்களையும் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை 195 போ் கண்டறியப்பட்டுள்ளனா். என்எல்சி நகரியத்தில் கூடுதல் விழிப்புணா்வாக செயல்பட வலியுறுத்தப்பட்டுள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் கண்டறியப்பட்டால் அவா்களை தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்கும் வகையில் கடலூா், விருத்தாசலம், பண்ருட்டி, சிதம்பரத்தில் இடங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன. பாதிப்புக்கு உள்ளானவா்கள் கண்டறியப்பட்டால் அவா்களுக்கு அங்கு வைத்து சிகிச்சை அளிக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com