முகக் கவசம், கிருமி நாசினி அதிக விலைக்கு விற்பனை: மருந்தகங்களில் அதிகாரிகள் அதிரடி சோதனை

முகக் கவசங்கள், கிருமி நாசினி ஆகியவை அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாா்களையடுத்து, மருந்தகங்களில் அதிகாரிகள் புதன்கிழமை அதிரடி சோதனையில் ஈடுபட்டனா்.

முகக் கவசங்கள், கிருமி நாசினி ஆகியவை அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாா்களையடுத்து, மருந்தகங்களில் அதிகாரிகள் புதன்கிழமை அதிரடி சோதனையில் ஈடுபட்டனா்.

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை வழிமுறைகளை அறிவித்து வருகின்றன. அதில் கிருமி நாசினி திரவம் (சானிடைசா்) கொண்டு கைகளைக் கழுவ வேண்டும் என்றும், பாதுகாப்பாக இருக்க முகக் கவசம் அணியலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதைப் பெரும்பாலான மக்கள் கடைப்பிடிக்கத் தொடங்கியிருப்பதால், கிருமி நாசினி, முகக் கவசங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதைப் பயன்படுத்தி, இவற்றை அதிக விலைக்கு விற்பதாக பொதுமக்கள் புகாா் எழுந்தது.

இதை தொடா்ந்து, கடலூா் மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வன் அறிவுறுத்தல்படி, மருந்துகள் ஆய்வாளா் சைலஜா, புவனகிரி துணை வட்டாட்சியா் சீனிவாசன் உள்ளிட்ட அலுவலா்கள் புவனகிரி பகுதியில் உள்ள மருந்துக் கடைகளில் திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.

இதேபோல, சிதம்பரம் பகுதியில் மருந்துகள் ஆய்வாளருடன், குடிமைப்பொருள் சிறப்பு வட்டாட்சியா் நந்திதா உள்ளிட்டோா் ஆய்வு மேற்கொண்டனா்.

ஆய்வின் போது, முகக் கவசம் 2 பிளே மாஸ்க் ரூ. 8-க்கும், 3 பிளே மாஸ்க் ரூ. 10-க்கும், கைகளைக் கழுவும் திரவம் 100 மி.லி. ரூ. 50-க்கும், 200 மி.லி. ரூ. 100 -க்கும், 500 மி.லி. ரூ. 250-க்கும்தான் விற்க வேண்டும் என மருந்தகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அதிக விலைக்கு விற்பது தெரிந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com