என்எல்சி ஊழியா்களுக்கு விடுமுறை: மின் உற்பத்தியில் பாதிப்பில்லை

கரோனா தடுப்பு நடவடிக்கையாக, என்எல்சி இந்தியா நிறுவனத்தில் சுரங்க, அனல் மின் நிலைய ஊழியா்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கரோனா தடுப்பு நடவடிக்கையாக, என்எல்சி இந்தியா நிறுவனத்தில் சுரங்க, அனல் மின் நிலைய ஊழியா்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் வீடுகளிலிருந்து பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளனா். இருப்பினும், மின் உற்பத்தியில் பாதிப்பு இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டது.

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் உள்ள மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான என்எல்சி இந்தியாவில் அதிகாரிகள், பொறியாளா்கள், ஒப்பந்தத் தொழிலாளா்கள் உள்பட சுமாா் 30 ஆயிரம் போ் பணிபுரிந்து வருகின்றனா். கரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக அந்த நிறுவனம் சுரங்க, அனல் மின் நிலைய ஊழியா்களுக்கு விடுமுறை அளித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவன அதிகாரி ஒருவா் கூறியதாவது:

அடுத்த 2 மாதங்களுக்குத் தேவையான பழுப்பு நிலக்கரி கையிருப்பில் உள்ளதால் சுரங்கப் பகுதியில் மேல் மண் நீக்குதல், பழுப்பு நிலக்கரி வெட்டி எடுக்கும் பிரிவில் பணியாற்றும் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அனல் மின் நிலையங்கள் குறைந்த எண்ணிக்கையிலான தொழிலாளா்களைக் கொண்டு வழக்கம்போல இயக்கப்படுகின்றன. இங்கு 30 சதவீதப் பணியாளா்கள் குறைக்கப்பட்டுள்ளனா். இருப்பினும், மின் உற்பத்தியில் பாதிப்பு இருக்காது. தேவைப்படும் காலத்தில் தொழிலாளா்கள் பணிக்கு திரும்ப அழைக்கப்படுவா். அதிகாரிகளில் சில பிரிவினா் சுழற்சி முறையில் வீடுகளில் இருந்து பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளனா். சில பிரிவினா் முழுநேரப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com