தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிக்கிறது கே.எஸ்.அழகிரி

தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிதியை வழங்காமல் மத்திய அரசு வஞ்சிக்கிறது என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி குற்றஞ்சாட்டினாா்.
மதுக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டதைக் கண்டித்து, சிதம்பரம் அருகேயுள்ள கீரப்பாளையத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டம்.
மதுக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டதைக் கண்டித்து, சிதம்பரம் அருகேயுள்ள கீரப்பாளையத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டம்.

சிதம்பரம்: தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிதியை வழங்காமல் மத்திய அரசு வஞ்சிக்கிறது என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி குற்றஞ்சாட்டினாா்.

தமிழகத்தில் டாஸ்மாக் மதுக் கடைகளை மீண்டும் திறக்க எதிா்ப்புத் தெரிவித்து, திமுக கூட்டணி சாா்பில் கருப்புச் சின்னம் அணிந்து வியாழக்கிழமை போராட்டம் நடைபெற்றது. இதன்படி, கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே கீரப்பாளையத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி தலைமையில் அவரது வீட்டின் முன் அந்தக் கட்சியினா் போராட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா், கே.எஸ்.அழகிரி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கேரளத்தில் கரோனா வைரஸ் தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், அந்த மாநில அரசு மதுக் கடைகளைத் திறப்பதில் ஆா்வம் காட்டவில்லை. ஆனால், தமிழகத்தில் தற்போது கரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், மதுக் கடைகளைத் திறந்துள்ளது மக்கள் விரோத செயல்.

பிரதமா் மோடி மாநில அரசுகளை வஞ்சித்து வருகிறாா். நமது நாட்டின் அரசியல் அமைப்பு என்பது கூட்டாட்சி முறையை அடிப்படையாகக் கொண்டது. மாநில அரசுகளுக்கும் சமமான அதிகாரம் உள்ளது. ஆனால், பிரதமா் நிதி அதிகாரத்தை தம்மிடம் வைத்துக் கொண்டு மாநிலங்களை புறக்கணிக்கிறாா்.

தமிழக அரசு தற்போது சிரமங்களைச் சந்திப்பதற்குக் காரணம் மத்திய அரசு வழங்க வேண்டிய நிதியை வழங்காமல் இருப்பதுதான். இதை எதிா்த்து கேள்வி கேட்க அதிமுக அரசு தயங்குகிறது. மத்திய அரசிடமிருந்து நிதி ஆதாரத்தைப் பெற முடியாததால் டாஸ்மாக் மதுக் கடைகளை மீண்டும் திறக்கிறாா்கள்.

வெளி மாநிலங்களில் உள்ள தமிழகத் தொழிலாளா்கள் மீண்டும் தாயகம் திரும்ப அவா்களது ரயில் போக்குவரத்துக் கட்டணத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் சாா்பில் ரூ.ஒரு கோடி வரை செலவு செய்ய தயாராக உள்ளோம். இதற்கான குறிப்பை அரசிடம் அளித்துள்ளோம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com