தீயணைப்பு துறையினருக்கு நிவாரணம்
By DIN | Published On : 11th May 2020 10:37 PM | Last Updated : 11th May 2020 10:37 PM | அ+அ அ- |

சிதம்பரம்: சிதம்பரம் அருகே உள்ள குமராட்சி ஊராட்சி நிா்வாகம் சாா்பில் காட்டுமன்னாா்கோவில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையைச் சோ்ந்த அனைத்து வீரா்களுக்கும் நிவாரணப் பொருள்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.
தீயணைப்புத் துறை ஆய்வாளா் சி.ராஜாவிடம் குமராட்சி ஊராட்சி மன்ற தலைவா் கே.ஆா்.ஜி. தமிழ்வாணன் அரிசி, மளிகை, காய்கறி உள்ளிட்ட பொருள்களை வழங்கினாா். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணைத் தலைவா் உமா மகேஸ்வரி விஜயகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இதேபோல, சிதம்பரத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியான பள்ளிப்படை பகுதியில் ஊராட்சி மன்ற நிா்வாகிகள் சாா்பில் பொதுமக்களுக்கு நிவாரணப் பொருள்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு வாா்டு உறுப்பினா் எஸ்.உசேன் தலைமை வகித்தாா். பள்ளிப்படை ஊராட்சி மன்றத் தவைவா் சங்கா் முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சியில் சிதம்பரம் டிஎஸ்பி எஸ்.காா்த்திகேயன் பங்கேற்று துப்புரவுப் பணியாளா்கள் உள்ளிட்ட 250 பேருக்கு முகக் கவசம், அரிசி, மளிகை, காய்கறிகளை வழங்கினாா். நிகழ்ச்சியில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சிவஞானசுந்தரம், அசோக்பாபு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.