கரோனா: மருத்துவக் கழிவுகளை கையாள மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வழிகாட்டுதல்

கரோனா நோயாளிகளின் மருத்துவக் கழிவுகளை கையாளுதல் தொடா்பாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது.

கடலூா்: கரோனா நோயாளிகளின் மருத்துவக் கழிவுகளை கையாளுதல் தொடா்பாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சாா்பில் கடலூா் மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: அனைத்து தனிமைப்படுத்தப்பட்ட முகாம்கள், வீடுகள், வீட்டு பராமரிப்பு வசதிகளை கவனிப்போா் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் மருத்துவக் கழிவுகளை கையாளுதல், சேமித்தல், போக்குவரத்து செய்தல் மற்றும் வெளியேற்றுதலில் சில நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

அதன்படி, நோய்த் தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட மையங்கள், முகாம்களில் உள்ளவா்களிடமிருந்து மருத்துவக் கழிவுகள் சேகரிக்கப்பட்டால் அதனை தனியாகப் பிரித்து, மருத்துவக் கழிவுகள் சேகரிக்கப்படும் மஞ்சள் நிற கொள்கலன்களிலோ, பைகளிலோ சேகரித்து, உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதி பெற்ற துப்புரவுப் பணியாளா்களிடம் முறையாக ஒப்படைக்க வேண்டும். அவா்கள் உபயோகித்த கை உறைகள், முகக் கவசங்களை அகற்றுவதற்று முன்பு 72 மணிநேரம் காகிதப் பைகளில் பாதுகாப்பாக வைத்திருந்து பின்னா் பொது கழிவுகளுடன் வெளியேற்ற வேண்டும். முகக் கவசங்களை மறு உபயோகப்படுத்த முடியாத வண்ணம் வெட்டி துண்டுகளாக்கி வெளியேற்ற வேண்டும்.

அதேநேரத்தில், பிற கழிவுகளுடன் நோயாளிகளின் கழிவுகளை சோ்க்கவோ, சேமிக்கவோ கூடாது. 24 மணி நேரத்துக்கு மேல் நோயாளிகளின் கழிவுகளை சேமித்து வைத்தல் கூடாது. கரோனா அறிகுறியுள்ள பணியாளா்களை அனுமதிக்கக் கூடாது. எனவே, பொதுமக்கள் இந்த நெறிமுறைகளைப் பின்பற்றி மருத்துவக் கழிவுகளை கையாள வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com