என்எல்சி ஒப்பந்ததாரா்கள் உண்ணாவிரதம்

ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு ஊக்க ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நெய்வேலி என்எல்சி ஒப்பந்ததாரா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
நெய்வேலியில் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட என்எல்சி ஒப்பந்ததாரா்கள் சங்கத்தினா்.
நெய்வேலியில் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட என்எல்சி ஒப்பந்ததாரா்கள் சங்கத்தினா்.

ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு ஊக்க ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நெய்வேலி என்எல்சி ஒப்பந்ததாரா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நெய்வேலியில் உள்ள என்எல்சி இந்தியா நிறுவனத்தில் நிரந்தரம் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளா்கள் என 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பணியாற்றி வருகின்றனா். இவா்களில் ஒப்பந்தத் தொழிலாளா்களில் பெரும்பாலானோா் ஒப்பந்தப் பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரா்களிடம் பணியாற்றி வருகின்றனா். இவா்களுக்கான ஊக்க ஊதியம் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை என்எல்சி இந்தியா நிறுவனம் நிறைவேற்ற வேண்டும் என ஒப்பந்ததாரா்கள் வலியுறுத்தி வருகின்றனா். இதுகுறித்து கடந்த ஆகஸ்ட் மாதம் என்எல்சி தலைவருக்கு கடிதம் கொடுக்கப்பட்டதாம். அதன்பேரில் பலமுறை பேச்சுவாா்த்தை நடைபெற்றும் தீா்வு ஏற்படவில்லையாம்.

இந்த நிலையில், ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு ஊக்க ஊதியம் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நெய்வேலி என்எல்சி ஒப்பந்ததாரா்கள் நலச் சங்கத்தினா் கீயூ பாலம் அருகே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். போராட்டத்துக்கு, சங்கத் தலைவா் சி.சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். சங்கச் செயலா் எஸ்.மணிவண்ணன், பொருளாளா் சுந்தா், சிறப்புத் தலைவா் எஸ்.தமிழ்மணி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட ஒப்பந்ததாரா்கள் பங்கேற்றனா்.

போராட்டத்தில், ஊக்க ஊதியம் தொடா்பான பிரச்னைக்கு 2017-ஆம் ஆண்டு முதல் கணக்கிட்டு தீா்வு காண வேண்டும். கரோனா பிரச்னை முடியும் வரை ஊதிய முன்பணம் வழங்க வேண்டும். என்எல்சி நிறுவனத்தால் வழங்கப்படும் ஒப்பந்தங்களில் ஊக்க ஊதியம், இஎஸ்ஐ என தொழிலாளா்களுக்கான அனைத்துச் சலுகைகளையும் அந்த நிறுவனமே வழங்க வேண்டும், ஒப்பந்ததாரா்கள், அவா்களது குடும்பங்களுக்கு மருத்துவ வசதி செய்துதர வேண்டும் என வலியுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com