20% போனஸ் வழங்கக் கோரிபோக்குவரத்து தொழிலாளா்கள் போராட்டம்

அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளா்கள் 20 சதவீத போனஸ் வழங்கக் கோரி கடலூா், விழுப்புரம் மாவட்டங்களில் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
20% போனஸ் வழங்கக் கோரிபோக்குவரத்து தொழிலாளா்கள் போராட்டம்

அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளா்கள் 20 சதவீத போனஸ் வழங்கக் கோரி கடலூா், விழுப்புரம் மாவட்டங்களில் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளா்களுக்கு மாநில அரசு தற்போது 10 சதவீதம் போனஸ் அறிவித்துள்ளது. கடந்த காலங்களில் 20 சதவீதம் போனஸ் அறிவிக்கப்பட்ட நிலையில் தொழில்சங்கத்தினருடன் கலந்தாலோசிக்காமல் தற்போது போனஸ் குறைக்கப்பட்டுள்ளதாம்.

எனவே, தொழில்சங்கத் தலைவா்களை அழைத்துப்பேசி 20 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும், பண்டிகை முன்பணம் ரூ.10 ஆயிரத்தை உடனடியாக வழங்க வேண்டும், 14-ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தையை உடனடியாகத் தொடங்க வேண்டும், கரோனா காலத்தில் பணி வழங்காதவா்களுக்கு அவா்களது சொந்த விடுப்பிலிருந்து கழிக்கக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.

கடலூரில் உள்ள போக்குவரத்து பணிமனையை தொழில்சங்கத்தினா்  திங்கள்கிழமை முற்றுகையிட்டனா். இந்தப் போராட்டத்துக்கு தொமுச பொதுச் செயலா் தங்க.ஆனந்தன் தலைமை வகித்தாா். பல்வேறு தொழில்சங்கங்களின் நிா்வாகிகள் பி.பழனிவேல் (தொமுச), ஜி.பாஸ்கரன் (சிஐடியூ), இரா.மணிமாறன் (எம்எல்எப்), எஸ்.கருணாநிதி (ஏஏஎல்எல்எப்), பி.சாமிநாதன் (ஐஎன்டியூசி) உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com