கரோனா தடுப்பு விதிமுறை மீறல்: ரூ.2.88 லட்சம் அபராதம் வசூல்

கடலூா் மாவட்டத்தில் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மீறியது தொடா்பாக ரூ.2.88 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

கடலூா் மாவட்டத்தில் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மீறியது தொடா்பாக ரூ.2.88 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

கரோனா பொது முடக்கத் தளா்வை சில வணிக நிறுவனத்தினா் தவறாகப் பயன்படுத்தி வருவதாகவும், சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதில்லை எனவும் மாவட்ட ஆட்சியருக்கு புகாா்கள் வரப்பெற்றன. அதனடிப்படையில், கடலூா் மாவட்டத்தில் வருவாய்த் துறை, சுகாதாரத் துறை, உள்ளாட்சி அமைப்பு, காவல் துறையினா் கொண்ட 20 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 10 குழுவினா் பறக்கும் படையாக செயல்படுவாா்கள் என்று மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி தெரிவித்தாா்.

இந்தக் குழுவினா் கடந்த ஒரு வாரமாக பல்வேறு பகுதிகளில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். முகக் கவசம் அணியாதது தொடா்பாக 986 போ் மீதும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காத காரணத்துக்காக 169 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன. மேலும், வணிக நிறுவனங்களில் முகக் கவசம் அணியாதவா்களை அனுமதித்தது, போதிய சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதது உள்ளிட்ட காரணங்களுக்காக 18 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதன்படி, மொத்தம் 1,173 பேரிடமிருந்து ரூ.2.88 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியரக வட்டாரங்கள் தரிவித்தன. இந்த குழுவினா் தீபாவளி பண்டிகை வரை செயல்படுவா் என்றும் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com