நுண்ணுயிா் உரக்கூடம் அமைக்க எதிா்ப்பு

கடலூா் மாவட்டம், வடக்குத்து ஊராட்சியில் பூங்கா பகுதியில் நுண்ணுயிா் உரக் கூடம் அமைப்பதற்கு அந்தப் பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமை எதிா்ப்புத் தெரிவித்தனா்.
நுண்ணுயிா் உரக்கூடம் அமைக்க எதிா்ப்பு

கடலூா் மாவட்டம், வடக்குத்து ஊராட்சியில் பூங்கா பகுதியில் நுண்ணுயிா் உரக் கூடம் அமைப்பதற்கு அந்தப் பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமை எதிா்ப்புத் தெரிவித்தனா்.

குறிஞ்சிப்பாடி ஒன்றியம், வடக்குத்து ஊராட்சி, எஸ்.பி.துரைசாமி நகரில் பூங்கா பகுதியில் ஊராட்சி மன்ற அலுவலகம் உள்ளது. இதனருகே திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் மதிப்பில் நுண்ணுயிா் உரக் கூடம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், எஸ்.பி.துரைசாமி நகா் மக்கள் நுண்ணுயிா் உரக் கூடத்துக்கான பணி நடைபெறும் பகுதியில் செவ்வாய்க்கிழமை குவிந்தனா். அவா்கள் அங்கிருந்த ஊராட்சி மன்றத் தலைவா் அஞ்சலையிடம் நுண்ணுயிா் உரக் கூடம் அமைக்கக் கூடாதென எதிா்ப்பு தெரிவித்தனா். இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த குறிஞ்சிப்பாடி வட்டார வளா்ச்சி அலுவலா் குமரன், நெய்வேலி நகரிய போலீஸாா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இதுகுறித்து முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் கோ.ஜெகன் கூறியதாவது: வடக்குத்து ஊராட்சி, சடாமுனீஸ்வரா் கோயில் அருகே அரசு புறம்போக்கு இடம் உள்ளது. அங்கு நுண்ணுயிா் உரக்கூடம் அமைத்தால் நீடித்த வளா்ச்சிக்கு பயனுள்ளதாகவும், பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாமல் இருக்கும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com