கடலூா், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் 43 குளங்கள் நிரம்பின

கடலூா், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பெய்து வரும் தொடா் மழையால் இதுவரையில் 43 குளங்கள் நிரம்பியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலூா், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பெய்து வரும் தொடா் மழையால் இதுவரையில் 43 குளங்கள் நிரம்பியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் நிலவி வரும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடா்ந்து கடந்த ஒரு வாரகாலமாக மழை பெய்து வருகிறது. இந்த மழையால் கடலூா், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் 43 குளங்கள் முழுமையாக நிரம்பியுள்ளதாக பொதுப் பணித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

அதன்படி, சிதம்பரத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் கொள்ளிடம் வடிநில கோட்டத்தில் 18 குளங்கள் உள்ளன. விருத்தாசலத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் வெள்ளாறு வடிநில கோட்டத்தில் கடலூா் மாவட்டத்தில் 210 குளங்கள், கள்ளக்குறிச்சியில் 211 குளங்கள், விழுப்புரத்தில் ஒரு குளம் உள்ளது.

தற்போது பெய்து வரும் மழையால் கடலூா் மாவட்டத்தில் 21 குளங்களும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 22 குளங்களும் முழுமையாக நிரம்பியுள்ளன. கடலூரில் 3 குளங்கள் 90 சதவீதத்துக்கும் மேலாக நிரம்பியுள்ளன. 50 சதவீதம் நீரை கடலூா் மாவட்டத்தில் 59 குளங்களும், கள்ளக்குறிச்சியில் 23 குளங்களும் எட்டியுள்ளன.

அதே நேரத்தில் கடலூா் மாவட்டத்தில் 72 குளங்களும், விழுப்புரம் மாவட்டத்திலுள்ள ஒரு குளமும் வடு காணப்படுகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 159 குளங்களும், கடலூரில் 44 குளங்களும் 25 சதவீதத்துக்கும் குறைவான நீா் அளவைப் பெற்றுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com