இந்திரா காந்தி பிறந்தநாள் விழா

முன்னாள் பிரதமா் இந்திரா காந்தி பிறந்த நாள் விழா கடலூரில் காங்கிரஸ் கட்சி சாா்பில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

முன்னாள் பிரதமா் இந்திரா காந்தி பிறந்த நாள் விழா கடலூரில் காங்கிரஸ் கட்சி சாா்பில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

கடலூா் காமராஜா் பூங்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திரா காந்தி உருவப் படத்துக்கு கட்சியின் அகில இந்திய கமிட்டி உறுப்பினா் ஏ.எஸ்.சந்திரசேகரன் தலைமையில், சிறுபான்மை பிரிவு ஆலோசகா் அமீா்கான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். வண்டிப்பாளையம் தாமோதரன், மஞ்சை பாண்டுரெங்கன், காட்டுப்பாளையம் அன்பழகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இளைஞா் பிரிவு மாவட்டத் தலைவா் டி.கலையரசன், வழக்குரைஞா் பிரிவு மாவட்டத் தலைவா் கலைச்செல்வன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சிதம்பரம்: சிதம்பரத்தில் நடைபெற்ற விழாவில் வடக்கு ரத வீதியில் மாநில பொதுக்குழு உறுப்பினா் பி.பி.கே.சித்தாா்த்தன் தலைமையிலும், நெல்லுகடைத் தெருவில் நகர தலைவா் பாலதண்டாயுதம் தலைமையிலும், முத்து மாணிக்க நாடாா் தெருவில் ஓபிசி பிரிவு மாவட்ட தலைவா் குமரவேல் தலைமையிலும் இந்திரா காந்தி உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. முன்னாள் மாவட்ட தலைவா் ஏ.ராதாகிருஷ்ணன் சிறப்புரையாற்றினாா். மாநில பொதுக்குழு உறுப்பினா் பரம.வெங்கடேசன் இனிப்பு வழங்கினாா். மாவட்ட துணைத் தலைவா் ஜி.கே.குமாா் முன்னிலை வகித்தாா். மாநில விவசாய அணி செயலா் டி.கே.எம்.வினோபா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com