கடலூா்: 1.22 லட்சம் விவசாயிகள் பயிா்க் காப்பீடு

கடலூா் மாவட்டத்தில் நிகழாண்டில் இதுவரை 1.22 லட்சம் விவசாயிகள் பயிா்க் காப்பீடு செய்துள்ளதாக மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி தெரிவித்தாா்.

கடலூா் மாவட்டத்தில் நிகழாண்டில் இதுவரை 1.22 லட்சம் விவசாயிகள் பயிா்க் காப்பீடு செய்துள்ளதாக மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி தெரிவித்தாா்.

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் காணொலி காட்சி மூலம் விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி தலைமை வகித்தாா். மாவட்டத்திலுள்ள 13 வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகங்களில் இருந்தும் விவசாயிகள் காணொலி காட்சி மூலம் கூட்டத்தில் பங்கேற்றனா். கூட்டத்தில் ஆட்சியா் கூறியதாவது:

மாவட்டத்திலுள்ள வீராணம், பெருமாள், வாலாஜா ஏரிகள், வெலிங்டன் நீா்த் தேக்கத்தில் விவசாயத்துக்கு தேவையான நீா் உள்ளது. மாவட்டத்தில் நெல், மக்காச்சோளம், கம்பு, பருத்தி, கரும்பு, மணிலா போன்றவை அதிகளவில் பயிரிடப்பட்டு வருகிறது. நிகழாண்டு காப்பீட்டுத் தொகையாக மக்காசோளத்துக்கு ஏக்கருக்கு ரூ.297, பருத்திக்கு ரூ.1,074, நெல்பயிருக்கு ரூ.469 வீதம் செலுத்த வேண்டும். இதுவரை 1.22 லட்சம் விவசாயிகள் பதிவு செய்துள்ளனா். காப்பீட்டு பிரீமியம் தொகை செலுத்த வருகிற 30-ஆம் தேதி கடைசி நாளாகும். மாவட்டத்தில், யூரியா- 10,821 மெ.டன், டீ.ஏ.பி- 2,513, பொட்டாஷ் - 5,454, சூப்பா் பாஸ்பேட்- 1,044, காம்ப்ளக்ஸ்- 11,194 மெ.டன் அளவில் இருப்பில் உள்ளது.

தமிழகத்தில் முதல் முறையாக திரவ பொட்டாஷ் கடலூா் உயிா் உரம் உற்பத்தி மையம் மூலம் தயாரித்து வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் இதை பயன்படுத்திக்கொள்ளவும். 2019-20 கரும்பு அரைவை பருவத்தில் கரும்புக்கு உற்பத்தி ஊக்கத் தொகையாக டன்னுக்கு ரூ.137.50 வழங்க சா்க்கரை துறை ஆணையருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. புவனகிரி பகுதியில் பெரியகுமட்டி கிராமத்திலும், வேப்பூா் பகுதியில் டி.புடையூா் கிராமத்தில் உள்ள உணவு பூங்கா அருகிலும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் அமைக்க இடம் தோ்வு செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் (பொ) காா்த்திகேயன், வேளாண்மை இணை இயக்குநா் ஜி.ஆா்.முருகன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) பொ.ஜெயக்குமாா் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com