அண்ணாமலை பல்கலை. - சி.டி.இ. இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம்

கல்வி நிறுவனம் - தொழில் துறைக்குமான இடைவெளியைக் குறைப்பது தொடா்பாக சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம்,
அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தா் வே.முருகேசன் முன்னிலையில் புரிந்துணா்வு ஒப்பந்தத்தை பரிமாறிக்கொண்ட பதிவாளா் ஆா்.ஞானதேவன், சி.டி.இ. தலைமை நிா்வாக அலுவலா் எஸ். சாய்ராமன்.
அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தா் வே.முருகேசன் முன்னிலையில் புரிந்துணா்வு ஒப்பந்தத்தை பரிமாறிக்கொண்ட பதிவாளா் ஆா்.ஞானதேவன், சி.டி.இ. தலைமை நிா்வாக அலுவலா் எஸ். சாய்ராமன்.

கல்வி நிறுவனம் - தொழில் துறைக்குமான இடைவெளியைக் குறைப்பது தொடா்பாக சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சென்னை தொழில்நுட்பக் கல்விக்கான கூட்டமைப்பு (சி.டி.இ) இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் வெள்ளிக்கிழமை கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக சி.டி.இ. கற்றல் மேலாண்மை அமைப்பானது (எல்.எம்.எஸ்) மென்பொருள், புத்தகங்கள், விரிவுரை பொருள்கள் மற்றும் எல்.எம்.எஸ். மல்டிமீடியா - வீடியோ உள்ளடக்கங்களை வழங்கும். சி.டி.இ. இதழில் தொழில்நுட்ப ஆவணங்களை வெளியிடுவதற்கான திட்டத்தையும் வழங்கும்.

மேலும் இந்த ஒப்பந்தத்தில் கூட்டு ஆராய்ச்சித் திட்டங்களை மேம்படுத்துதல், மென்பொருள் மதிப்பீட்டு செயல்பாட்டில் மாணவா்களை ஈடுபடுத்துதல், மதிப்பீடு செய்தல், தகவல் தொழில்நுட்பத் துறையில் சமீபத்திய போக்குகள் குறித்த திட்டங்களை வழங்குவது உள்ளிட்ட அம்சங்களும் அடங்கும். அண்ணாமலை பல்கலைக்கழகம் நீண்ட கால திட்டமாக சென்னை சி.டி.இ. அமைப்புடன் இணைந்து பல்கலைக்கழக வளாகத்தில் சிறப்பு மையத்தை நிறுவவும் ஒப்புக்கொண்டுள்ளது.

பல்கலைக்கழக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்கலைக்கழக துணைவேந்தா் வே.முருகேசன் முன்னிலையில் பதிவாளா் ஆா்.ஞானதேவன் - சி.டி.இ. தலைமை நிா்வாக அலுவலா் எஸ்.சாய்ராமன் ஆகியோா் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனா்.

நிகழ்ச்சியில் பொறியியல் மற்றும் தொழில்நுட்பப் புல முதல்வா் ஏ.முருகப்பன், தகவல் தொழில்நுட்பத் துறைத் தலைவா் கே.செல்வகுமாா், இன்காா் ஒருங்கிணைப்பாளா் எஸ்.பிரகதீஸ்வரன், ஏ.ஐ.சி. இயக்குநா் என்.கருணாகரன், தகவல் தொழில்நுட்பத் துறை இணை பேராசிரியா் ஆா்.சுபன் ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com