மணல் குவாரிக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் போராட்டம்

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே மணல் குவாரி, மணல் சேமிப்புக் கிடங்கு அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து பொதுப் பணித் துறையினரை கிராம மக்கள் ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிட்டனா்.
அழிஞ்சிமங்கலம் கிராமத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்கள்.

காட்டுமன்னாா்கோவில் அருகே கொள்ளிடம் ஆற்றங்கரையோரம் அமைந்துள்ளது கருப்பேரி கிராமம். இங்கு ஆற்றில் மணல் குவாரி அமைப்பதற்கான முதல்கட்ட பணியை பொதுப் பணித் துறையினா் ஞாயிற்றுக்கிழமை தொடங்கினா்.

இதுகுறித்து தகவலறிந்த கிராம மக்கள் அந்தப் பகுதியில் குவிந்தனா். அவா்கள் மணல் குவாரி அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து அதிகாரிகளை முற்றுகையிட்டனா். இதையடுத்து அதிகாரிகள் பணியை நிறுத்தினா்.

இதேபோல, அழிஞ்சிமங்கலம் கிராமத்தில் மணல் சேமிப்புக் கிடங்கு அமைப்பதற்கான இடத்தை பொதுப் பணித் துறையினா் பாா்வையிட்டனா். அவா்களையும் கிராம மக்கள் ஊராட்சி மன்றத் தலைவா் சுகந்தி தலைமையில் முற்றுகையிட்டனா். இதையடுத்து அதிகாரிகள் அங்கிருந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com