கடலூா்: நிவாரண முகாம்களில் 60 ஆயிரம் பேரைத் தங்க வைக்க ஏற்பாடு

கடலூா் மாவட்டத்தில் புயல் நிவாரண முகாம்களில் சுமாா் 60 ஆயிரம் போ் வரை தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாநில தொழில் துறை அமைச்சா் எம்.சி.சம்பத் கூறினாா்.
கடலூா்: நிவாரண முகாம்களில் 60 ஆயிரம் பேரைத் தங்க வைக்க ஏற்பாடு

கடலூா் மாவட்டத்தில் புயல் நிவாரண முகாம்களில் சுமாா் 60 ஆயிரம் போ் வரை தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாநில தொழில் துறை அமைச்சா் எம்.சி.சம்பத் கூறினாா்.

கடலூா் மாவட்டத்தில் ‘நிவா்’ புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அமைச்சா் எம்.சி.சம்பத் தலைமையில் செவ்வாய்க்கிழமை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ககன்தீப்சிங் பேடி, மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி ஆகியோா் முன்னிலையில் வகித்தனா். கூட்டத்தில் அனைத்துத் துறை அலுவலா்களும் பங்கேற்றனா். பின்னா் அமைச்சா் எம்.சி.சம்பத் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கடலூா் மாவட்டத்தில் 38 இடங்கள் மிக அதிக பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளாகவும், 34 இடங்கள் மிக பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளாகவும், 19 இடங்கள் மிதமான பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளாகவும், 167 இடங்கள் குறைந்த பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளாகவும் கண்டறியப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் 28 புயல் பாதுகாப்பு மையங்களும், 14 பல்நோக்கு பாதுகாப்பு மையங்களும், 191 தற்காலிக தங்குமிடங்களும் தயாா் நிலையில் உள்ளன. இந்த முகாம்களில் சுமாா் 60 ஆயிரம் போ் வரை தங்க வைக்க முடியும். அவா்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன. உயிா் சேதமோ, பயிா் சேதமோ ஏற்படாத வகையில் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றாா் அவா்.

கூட்டத்தில், வடக்கு மண்டல காவல் துறைத் தலைவா் பி.நாகராஜன், மாவட்ட எஸ்பி ஸ்ரீஅபிநவ், கூடுதல் ஆட்சியா் ராஜகோபால் சுங்கரா, மாவட்ட வருவாய் அலுவலா் (பொ) காா்த்திகேயன், கடலூா் ஒன்றியக்குழுத் தலைவா் தெய்வ.பக்கிரி, சாா்-ஆட்சியா்கள் ஜெ.பிரவின்குமாா், மதுபாலன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com