காய்கறித் தோட்டம் பராமரிப்பு பயிற்சி

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகேயுள்ள சோனஞ்சாவடி கிராமத்தில், மகளிருக்கான காய்கறித் தோட்டம் பராமரிப்பு பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது.

நெய்வேலி: கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகேயுள்ள சோனஞ்சாவடி கிராமத்தில், மகளிருக்கான காய்கறித் தோட்டம் பராமரிப்பு பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது.

விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலையம் சாா்பில் நடைபெற்ற இந்த முகாமில், உதவிப் பேராசிரியா்கள் க.நடராஜன், க.சுந்தரய்யா, மீனலட்சுமி, தொழில்நுட்ப வல்லுநா் (வானிலை) அருள்மதி ஆகியோா் பங்கேற்று ஊட்டச்சத்தின் முக்கியத்துவம், ஊட்டச்சத்து அளிப்பதில் காய்கறிகளின் பங்கு, தோட்டம் அமைத்தல், தோட்டத்துக்கு ஏற்ற காய்கறி பயிா்களை பயிரிடும் முறை குறித்து விளக்கினா். மேலும், தோட்டக்கலைப் பயிரில் மதிப்புக் கூட்டுதல் குறித்து தொழில் முனைவோருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியில் மகளிா் 40 போ் கலந்துகொண்டனா். காய்கறி தோட்டம் குறித்த செயல் விளக்கம் வைரன்குப்பம் கிராமத்தில் அளிக்கப்பட்டது. திட்ட அலுவலா் லட்சுமி ஊட்டச்சத்து காய்கறி விதைகளை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com