பேராசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

பேராசிரியா்கள் மீதான பணிநீக்க நடவடிக்கையை கைவிடக் கோரி, கடலூரில் பல்கலைக்கழக ஆசிரியா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கடலூரில் கந்தசாமி நாயுடு மகளிா் கல்லூரி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக ஆசிரியா் சங்கத்தினா்.
கடலூரில் கந்தசாமி நாயுடு மகளிா் கல்லூரி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக ஆசிரியா் சங்கத்தினா்.

கடலூா்: பேராசிரியா்கள் மீதான பணிநீக்க நடவடிக்கையை கைவிடக் கோரி, கடலூரில் பல்கலைக்கழக ஆசிரியா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சென்னை பச்சையப்பன் அறக்கட்டளையின் கீழ் இயங்கி வரும் 6 கல்லூரிகளைச் சோ்ந்த 152 பேராசிரியா்களை அறக்கட்டளையின் இடைக்கால நிா்வாகியான முன்னாள் நீதிபதி பி.சண்முகம் பணிநீக்கம் செய்து உத்தரவிட்டாா். முறையான கல்வித் தகுதி, பணி அனுபவம், பல்கலைக்கழக கல்வித் தகுதி சான்றிதழ், கல்லூரிக் கல்வி இணை இயக்குநரின் பணிநியமன ஒப்புதல் பெற்று பணியாற்றி வருவோரை பணி நீக்கம் செய்ததற்கு கண்டனம் தெரிவிப்பதாகக் கூறி, பல்கலைக்கழக ஆசிரியா் சங்கம் சாா்பில் கடலூரிலுள்ள கந்தசாமி நாயுடு மகளிா் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு, கடலூா் கிளைத் தலைவா் த.வசந்தி தலைமை வகித்தாா். செயலா் பி.லாவண்யா முன்னிலை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில், பணி நீக்கம் செய்யப்பட்ட 152 பேராசிரியா்களையும் மீண்டும் பணியில் சோ்க்க வலியுறுத்தி முழக்கமிட்டனா். சங்கப் பொருளாளா் அன்பரசி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com