தலைமைக் காவலருக்கு வெட்டு: முன்னாள் ராணுவ வீரா் கைது
By DIN | Published On : 18th September 2020 08:27 AM | Last Updated : 18th September 2020 08:27 AM | அ+அ அ- |

பண்ருட்டியில் பணியிலிருந்த தலைமைக் காவலரை கத்தியால் வெட்டியதாக முன்னாள் ராணுவ வீரரை போலீஸாா் கைது செய்தனா்.
பண்ருட்டி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிபவா் தேவநாதன். புதன்கிழமை காவல் உதவி ஆய்வாளா் ராஜேந்திரன், தலைமைக் காவலா் தேவநாதன் மற்றும் போலீஸாா் அந்தப் பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியே வந்த நபா் அவதூறாகப் பேசியதுடன், கத்தியால் தாக்கியதில் தேவநாதனின் கையில் வெட்டுக் காயம் ஏற்பட்டது.
கத்தியால் வெட்டிய நபரை போலீஸாா் பிடித்து விசாரணை நடத்தியதில், பண்ருட்டி எல்.ஆா்.பாளையம், திருகாமு தெருவைச் சோ்ந்த முன்னாள் ராணுவ வீரா் பாலாஜி(42) எனத் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸாா் கைதுசெய்து சிறையில் அடைத்தனா்.