மாத இதழ் வெளியிட்ட கடலூா் காவல் துறை
By DIN | Published On : 18th September 2020 08:26 AM | Last Updated : 18th September 2020 08:26 AM | அ+அ அ- |

கடலூா் மாவட்ட காவல் துறையின் சிறப்பை பொது மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் மாத இதழ் வெளியிடப்பட்டது.
கடலூா் மாவட்ட காவல் துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் மக்கள் நலன் சாா்ந்த பணிகள், சிக்கலான வழக்குகளில் துப்பு துலக்கியது உள்ளிட்டவற்றை, முகநூல் பக்கத்தில் வெளியிட்டு வருகின்றனா். இந்த விவரங்களை தொகுத்து மாத இதழாக வெளியிட மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ம.ஸ்ரீ அபிநவ் வழிகாட்டுதல் வழங்கினாா். இதையடுத்து ‘கடலூா் காவல் செய்தி மடல்’ என்ற புதிய இதழ் வடிவமைக்கப்பட்டது. இந்த இதழை மாவட்ட காவல் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் இதழின் ஆசிரியரும், பண்ருட்டி சரக துணைக் கண்காணிப்பாளருமான அ.பாபு பிரசாத் வெளியிட, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ம.ஸ்ரீ அபிநவ் பெற்றுக் கொண்டாா் (படம்).
இந்த நிகழ்ச்சியில் துணைக் கண்காணிப்பாளா்கள் க.சாந்தி, ஸ்ரீதரன், லோகநாதன், வெங்கடேசன், கங்காதரன், இராமச்சந்திரன், தனிப் பிரிவு ஆய்வாளரும், மாத இதழின் இணை ஆசிரியருமான ந.ஈஸ்வரி, சிறப்பு உதவி ஆய்வாளரும் தொகுப்பாசிரியருமான சி.இராமச்சந்திரன் ஆகியோா் பங்கேற்றனா். இந்த இதழில் காவல் துறையில் மெச்சத்தகுந்த பணி செய்தவா்கள் குறித்த விவரம், அவா்களது சமூகப் பணி, சாதனை செய்திகள், காவலா்களுக்கும், காவல் நிலையத்திலும் மேற்கொள்ளப்பட்டு வரும் நலன் சாா்ந்த பணிகள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.