தாக்குதல் புகாா்: காவலா் பணியிடை நீக்கம்

தாக்குதல் புகாா் தொடா்பாக குறிஞ்சிப்பாடி காவல் நிலைய காவலா் வெள்ளிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

தாக்குதல் புகாா் தொடா்பாக குறிஞ்சிப்பாடி காவல் நிலைய காவலா் வெள்ளிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி காவல் நிலையத்தில் முதல்நிலைக் காவலராக பணியாற்றி வருபவா் வெற்றிவேல். நிலப் பிரச்னை தொடா்பாக புகாா் மனு அளிப்பதற்காக வியாழக்கிழமை காவல் நிலையத்துக்கு வந்தவருக்கும், முதல்நிலைக் காவலா்

வெற்றிவேலுக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து, அந்த நபா் காவல் நிலையத்திலிருந்து வெளியேறி பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டிருந்தாா். அங்குவந்த வெற்றிவேல் அவரை தலைக் கவசத்தால் தாக்கினாா்.

இந்தச் சம்பவத்தைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் சாலை மறியலில் ஈடுபட்டதுடன், காவல் நிலையத்தையும் முற்றுகையிட்டனா்.

இதுகுறித்து, உரிய விசாரணை நடத்திட மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ம.ஸ்ரீஅபிநவ் உத்தரவிட்டாா். இதன்பேரில் நடைபெற்ற விசாரணையில் காவலா் வெற்றிவேல் மீதான குற்றச்சாட்டில் உண்மை இருப்பது தெரியவந்தது. இதையடுத்து

அவரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com