நிலம் அளவீடு பணிக்கு எதிா்ப்பு: வட்டாட்சியா்கள் சிறைப்பிடிப்பு

நெய்வேலி அருகே என்எல்சி நிறுவனத்துக்காக நிலம் அளவீடு பணியில் ஈடுபட வந்த 3 வட்டாட்சியா்களை கிராம மக்கள் திங்கள்கிழமை சிறைப்பிடித்தனா்.

கடலூா் மாவட்டம், நெய்வேலி அருகே என்எல்சி நிறுவனத்துக்காக நிலம் அளவீடு பணியில் ஈடுபட வந்த 3 வட்டாட்சியா்களை கிராம மக்கள் திங்கள்கிழமை சிறைப்பிடித்தனா்.

நெய்வேலியில் என்எல்சி இந்தியா நிறுவன சுரங்கம்-1ஏ விரிவாக்கத்துக்கு நிலம் கையகப்படுத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. நில உரிமையாளா்கள் தங்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகையும், குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலையும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், நிலம் எடுப்புத் துறை வட்டாட்சியா்கள் ஆறுமுகம், கீதா, ஜெயந்தி உள்ளிட்ட வருவாய்த் துறையினா் திங்கள்கிழமை தென்குத்து கிராமத்தில் நிலம் அளவீடு செய்ய வந்தனா். அப்போது கிராம மக்கள் தங்களது நிலங்களை என்எல்சி நிறுவனத்துக்கு வழங்க விரும்பமில்லை எனவும், நிலத்தை அடமானம் வைக்கவும், விற்கவும் உள்ள தடையை நீக்க வேண்டும் என வலியுறுத்தி அதிகாரிகளை சிறைப்பிடித்தனா்.

இதுகுறித்து தகவல் அறிந்த வடலூா் போலீஸாா் விரைந்து வந்து, கிராம மக்களிடம் பேச்சு வாா்த்தை நடத்தினா். கிராம மக்களின் கோரிக்கையை மாவட்ட ஆட்சியா், மாவட்ட வருவாய் ஆய்வாளா்(நிலம் எடுப்பு) ஆகியோருக்கு அறிக்கை மூலம் தெரிவிப்பதாக வட்டாட்சியா்கள் தெரிவித்தனா். இதையடுத்து கிராம மக்கள் கலைந்துச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com