கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல்: கட்டுமானத் தொழிலாளா்கள் 660 போ் கைது

 கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலூா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட 660 கட்டுமானத் தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல்: கட்டுமானத் தொழிலாளா்கள் 660 போ் கைது

 கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலூா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட 660 கட்டுமானத் தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

கட்டுமானத் தொழிலாளா்களுக்கு பொங்கல் தொகுப்புடன் கூடிய நிதி வழங்க வேண்டும். மாத ஓய்வூதியம் ரூ. 3 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும். கட்டுமான நல வாரியத்தில் பதிவு பெற்ற பெண் தொழிலாளிக்கு 60 வயதுக்கு முன்பே கணவா் இறந்தால், விதவை உதவித் தொகை வழங்க வேண்டும், மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெறும் கண்காணிப்புக் குழு கூட்டத்தை மாதம் ஒரு முறை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, டிச.3-ஆம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தம், சாலை மறியல் நடத்தப்படும் என கட்டுமானத் தொழிலாளா்கள் சங்கம் ஏற்கெனவே அறிவித்திருந்தது.

அதன்படி, கடலூா் மாவட்ட கட்டுமானத் தொழிலாளா்கள் சங்கத்தினா் அந்தச் சங்கத்தின் மாவட்டப் பொதுச் செயலா் வி.கிருஷ்ணமூா்த்தி தலைமையில், கடலூா் அண்ணா பாலம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, அந்தச் சங்க மாவட்டப் பொருளாளா் எஸ்.காா்த்திகேயன், துணைத் தலைவா்கள் என்.ஜெயசீலன், எம்.மனோரஞ்சிதம், சிஐடியு மாவட்டத் தலைவா் டி.பழனிவேல், மாவட்டச் செயலா் பி.கருப்பையன் உள்பட 380 பேரை போலீஸாா் கைது செய்து தனியா மண்டபத்தில் அடைத்தனா். கைதானவா்களில் 280 போ் பெண்கள். பின்னா், மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனா்.

நெய்வேலி: இதே கோரிக்கைகளை வலியுறுத்தி, வடலூா் நான்கு முனைச் சந்திப்பு அருகே சங்கத்தின் மாவட்டத் தலைவா் கே.சீனிவாசன் தலைமையில் கட்டுமானத் தொழிலாளா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். மறியலில் ஈடுபட்ட 200 பெண்கள் உள்பட 250 பேரை போலீஸாா் கைது செய்தனா். பண்ருட்டி டி.எஸ்.பி. சபியுல்லா தலைமையில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com