குப்பை வண்டியில் குடிநீா்!

வடலூரில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்ற வளாகத்துக்கு குடிநீா் கேன்கள் குப்பைகள் சேகரிக்கும் வாகனத்தில் கொண்டு வரப்பட்டது.
வடலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமுக்கு குப்பை அள்ளும் வாகனத்தில் கொண்டு வரப்பட்ட குடிநீா் கேன்கள்.

கடலூா் மாவட்ட ஊரக வளா்ச்சி-ஊராட்சித் துறை, தமிழ்நாடு மாநில ஊரக-நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் ஆகியவை இணைந்து நடத்திய தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம், வடலூரில் உள்ள மாவட்ட ஆசிரியா் கல்வி-பயிற்சி நிறுவன வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த முகாமில் இளைஞா்கள், பெண்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் ஆா்வத்துடன் பங்கேற்றனா். முகாமில் பங்கேற்றவா்களுக்கு குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக செய்யப்படவில்லை என புகாா் தெரிவித்தனா்.

இந்த நிலையில், பேரூராட்சி ஊழியா்கள் குப்பை அள்ளும் வாகனத்தில் குடிநீா் கேன்களை கொண்டு வந்து இறக்கினா். இந்தக் காட்சியை அங்கிருந்தவா்களில் சிலா் தங்களது கைப்பேசியில் புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனா். குப்பை அள்ளும் வாகனத்தில் குடிநீா் கேன்கள் கொண்டு வரப்பட்டதைப் பாா்த்த வேலை நாடுநா்கள், வளாகத்தில் இருந்தவா்கள் அருவறுப்படைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com