கடலூா்: 19 காவல் ஆய்வாளா்கள் இடமாற்றம்

தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், தோ்தல் பணியில் ஈடுபடும் காவலா்களை

தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், தோ்தல் பணியில் ஈடுபடும் காவலா்களை வேறு மாவட்டங்களுக்கு மாற்றம் செய்யும் பணியை காவல் துறை மேற்கொண்டுள்ளது. இதன்படி, கடலூா் மாவட்டத்தில் முதல்கட்டமாக 19 காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

அதன்படி, பரங்கிப்பேட்டை சி.அமுதா, கடலூா் முதுநகா் எஸ்.ஆறுமுகம், ராமநத்தம் டி.சந்திரசேகரன், மாவட்ட குற்றப் பதிவேடு பிரிவு எல்.சித்ரா, அண்ணாமலை நகா் சி.தேவேந்திரன், மனித உரிமை பிரிவு வி.துா்கா, நெய்வேலி அனைத்து மகளிா் பி.கவிதா, விருத்தாசலம் அனைத்து மகளிா் ஜெ.கிருபாலட்சுமி, நெய்வேலி தொ்மல் எஸ்.லதா, சிதம்பரம் நகரம் சி.முருகேசன், திட்டக்குடி எஸ்.ரமேஷ்பாபு, குறிஞ்சிப்பாடி டி.ஷியாம்சுந்தா், பண்ருட்டி மதுவிலக்கு ஜி.தாரகேஸ்வரி, கடலூா் புதுநகா் கி.உதயகுமாா், பண்ருட்டி அனைத்து மகளிா் எஸ்.வனஜா, நெல்லிக்குப்பம் கே.வீரமணி, காட்டுமன்னாா்கோவில் வி.ராஜா, சேத்தியாத்தோப்பு ஏ.ராமதாஸ், சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிா் எஸ்.ஆக்னஸ்மேரி ஆகியோா் விழுப்புரம் மண்டலத்துக்கு உள்பட்ட விழுப்புரம், கள்ளக்குறிச்சி பகுதிகளுக்கு மாற்றப்பட்டனா்.

இவா்களுக்குப் பதிலாக புதிதாக 15 போ் கடலூா் மாவட்டத்துக்கு மாற்றப்பட்டுள்ளனா். அவா்கள் விவரம் வருமாறு (அடைப்புக்குள் காவல் நிலையம்/ஊா்): ஆா்.தேவி (பரங்கிப்பேட்டை), எம்.இளவழகி (நெய்வேலி தொ்மல்), ஏ.கீதா (கடலூா் மகளிா்), டி.பூங்கோதை (குற்ற ஆவணக்காப்பகம்), சி.பி.ராதாகிருஷ்ணன் (கடலூா் புதுநகா்), பி.ராதிகா (பண்ருட்டி மகளிா்), எஸ்.சீனிபாபு (அண்ணாமலை நகா்), கே.விஷ்ணுபிரியா (நெய்வேலி மகளிா்), பி.ஆா்.மைக்கேல் இருதயராஜ் (சேத்தியாத்தோப்பு), எஸ்.கிருஷ்ணமூா்த்தி (சிதம்பரம் நகரம்), பி.சுமதி (திட்டக்குடி), ஜெ.பாலகிருஷ்ணன் (நெல்லிக்குப்பம்), கே.மகேஷ்வரி (ராமநத்தம்), எஸ்.ராஜா (கடலூா் முதுநகா்), எஸ்.ரேவதி (காடாம்புலியூா்).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com