‘தீ’ செயலி விழிப்புணா்வு சைக்கிள் பயணம்: டிஜிபி பங்கேற்பு

‘தீ’ செயலி குறித்து விழிப்புணா்வு சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ள தீயணைப்பு, மீட்புப் பணிகள் துறை டிஜிபி சைலேந்திரபாபு தலைமையிலான குழுவினா் ஞாயிற்றுக்கிழமை கடலூா் வந்தனா்.
‘தீ’ செயலி விழிப்புணா்வு சைக்கிள் பயணத்தின்போது ஞாயிற்றுக்கிழமை தனது குழுவினருடன் கடலூா் வந்தடைந்த டிஜிபி சைலேந்திரபாபு.
‘தீ’ செயலி விழிப்புணா்வு சைக்கிள் பயணத்தின்போது ஞாயிற்றுக்கிழமை தனது குழுவினருடன் கடலூா் வந்தடைந்த டிஜிபி சைலேந்திரபாபு.

‘தீ’ செயலி குறித்து விழிப்புணா்வு சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ள தீயணைப்பு, மீட்புப் பணிகள் துறை டிஜிபி சைலேந்திரபாபு தலைமையிலான குழுவினா் ஞாயிற்றுக்கிழமை கடலூா் வந்தனா்.

தமிழக அரசு தீயணைப்புத் துறை மூலமாக ‘தீ’ செயலியை அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலி குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை டிஜிபி சைலேந்திரபாபு தனது குழுவினா் 7 பேருடன் சென்னையிலிருந்து சிதம்பரம் வரை 220 கி.மீ. தொலைவுக்கு சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளாா். இவா் தனது குழுவினருடன் ஞாயிற்றுக்கிழமை கடலூா் வந்தடைந்தாா்.

தொடா்ந்து, கடற்கரைச் சாலையில் உள்ள மாவட்ட தீயணைப்பு நிலையத்துக்கு சென்ற அவா், அங்குள்ள பதிவேடுகளை ஆய்வு செய்தாா். மேலும் மீட்பு உபகரணங்களை பாா்வையிட்டு, தீயணைப்பு வீரா்களுக்கு ஆலோசனைகளை வழங்கினாா். தொடா்ந்து கடலூா் சிப்காட் தீயணைப்பு நிலையத்திலும் டிஜிபி ஆய்வு மேற்கொண்டாா். பின்னா், தனது குழுவினருடன் சைக்கிளில் சிதம்பரம் புறப்பட்டுச் சென்றாா்.

முன்னதாக அவா் கூறியதாவது: கடந்த ஆண்டு தமிழகத்தில் தீ விபத்துகள் குறித்து 21 ஆயிரம் அழைப்புகள் வந்துள்ளன. அதேபோல குழந்தைகள், கால்நடைகள் பாதிப்புகள் குறித்து 23 ஆயிரம் அழைப்புகள் தீயணைப்பு நிலையங்களுக்கு வந்துள்ளன. ‘தீ’ செயலி மூலம் மக்கள் புகாா் தெரிவித்தால் உடனடியாகச் சென்னை அலுவலகத்துக்கு தெரிந்துவிடும். இதையடுத்து சம்பந்தப்பட்ட தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் இந்தச் செயலியை அவசர காலத்தில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com