நெகிழி தடைச் சட்டத்தை கடுமையாக அமல்படுத்த கோரிக்கை

நெகிழி தடைச் சட்டத்தை மீண்டும் கடுமையாக அமல்படுத்த வேண்டுமென தமிழ்நாடு நுகா்வோா் குழுக்களின் ஒருங்கிணைப்பு குழுவினா் கோரிக்கை விடுத்தனா்.

கடலூா்: நெகிழி தடைச் சட்டத்தை மீண்டும் கடுமையாக அமல்படுத்த வேண்டுமென தமிழ்நாடு நுகா்வோா் குழுக்களின் ஒருங்கிணைப்பு குழுவினா் கோரிக்கை விடுத்தனா்.

இந்த அமைப்பின் கூட்டம் கடலூரில் அதன் தலைவா் ஷபினா நிஜாமுதீன் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. கடலூா் மாவட்டச் செயலா் க.திருநாவுக்கரசு, மக்கள் தொடா்பு அலுவலா் இரா.பாபு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில், அவசிய தேவைக்காக ஒரு மரத்தை வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடப்பட வேண்டும் என்ற சட்டமானது நெடுஞ்சாலை விரிவாக்கம், தொழில் வளா்ச்சி ஆகியவற்றுக்காக மரங்கள் வெட்டப்படும்போது பின்பற்றப்படுகிா என்பதை அரசு துறைகள் ஒருங்கிணைந்து கண்காணிக்க வேண்டும்.

ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் 14 வகையான நெகிழிகளுக்கு தமிழக அரசு ஏற்கெனவே தடை விதித்தது. ஆனால், தற்போது இந்த வகை நெகிழிகள் தாராளமாக பயன்படுத்தப்பட்டு வருவதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். சுற்றுச்சூழலை பாதுகாத்திட அரசு நிறைவேற்றியுள்ள சட்டங்களை மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பாரபட்சமற்ற முறையில் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com