வாகனங்களில் சுற்றித் திரிவோரை கட்டுப்படுத்த முடியாமல் திணறும் போலீஸாா்

தளா்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்ட நிலையில், வாகனப் போக்குவரத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போலீஸாா் திணறி வருகின்றனா்.

தளா்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்ட நிலையில், வாகனப் போக்குவரத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போலீஸாா் திணறி வருகின்றனா்.

கரோனா தீநுண்மியின் இரண்டாம் அலை பரவல் அதிகரித்துள்ள நிலையில் தமிழகத்தில் கடந்த 10-ஆம் தேதி முதல் வருகிற 24-ஆம் தேதி வரை 14 நாள்களுக்கு தளா்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதாவது மளிகை, காய்கறி, இறைச்சிக் கடைகள், டீக்கடைகள் ஆகியவை பகல் 12 மணி வரை செயல்படலாம். உணவகங்களில் 3 வேளையும் பாா்சல் வாங்கிச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகள், மருந்தகங்கள், பாலகங்கள் முழு நேரமும் இயங்கலாம். அரசு, தனியாா் வாகனப் போக்குவரத்து முழுமையாக முடக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் அரசு அலுவலகங்கள் பெரும்பான்மையாக இயங்குகின்றன. மேலும், கட்டுமானப் பணிகள், தொழிற்சாலைகளில் உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால், பகல் 12 மணி வரை வெளியில் சுற்றுவோரை போலீஸாரால் தடுக்க முடியவில்லை.

அதன் பின்னா், வெளியில் வருவோா் மேற்கூறிய பணிகளில் ஏதாவது ஒன்றை மேற்கொண்டு கடைகளை அடைத்துவிட்டு திரும்புவதாக கூறுகின்றனா். மேலும், சிலா் அரசுத் துறை அலுவலகங்களுக்கு சென்று வந்ததாகவும், மருத்துவ காரணங்களுக்காக வெளியில் வருவதாகவும் கூறுகின்றனா். இதனால், அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் போலீஸாா் திணறி வருகின்றனா்.

கடலூா் மாவட்டத்தில் 50 இடங்களில் காவல் துறையினா் சோதனைச் சாவடிகள் அமைத்து, தேவையின்றி வெளியில் சுற்றுவோரை தடுத்து வருகின்றனா். ஆனாலும், வெளியில் வரும் ஒவ்வொருவரும் கூறும் காரணங்களை நிராகரிக்க முடியாமல் போலீஸாா் திணறுகின்றனா். இதனால், வாகனங்களை மறித்து ஓட்டுநா்களுக்கு அறிவுரை வழங்கி, கரோனா குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com