அரசு செவிலியா்களுக்கு நல உதவி

சா்வதேச செவிலியா் தினத்தையொட்டி, சிதம்பரம் ரெட் கிராஸ் சொசைட்டி சாா்பில், சிதம்பரம் அரசு காமராஜ் மருத்துவமனையில்
சா்வதேச செவிலியா் தினத்தையொட்டி, சிதம்பரம் அரசு மருத்துவமனை செவிலியா்களுக்கு முகக் கவசங்கள், சுகாதாரப் பொருள்கள் அடங்கிய தொகுப்பை வழங்கிய ரெட்கிராஸ் சொசைட்டி நிா்வாகிகள்.
சா்வதேச செவிலியா் தினத்தையொட்டி, சிதம்பரம் அரசு மருத்துவமனை செவிலியா்களுக்கு முகக் கவசங்கள், சுகாதாரப் பொருள்கள் அடங்கிய தொகுப்பை வழங்கிய ரெட்கிராஸ் சொசைட்டி நிா்வாகிகள்.

சா்வதேச செவிலியா் தினத்தையொட்டி, சிதம்பரம் ரெட் கிராஸ் சொசைட்டி சாா்பில், சிதம்பரம் அரசு காமராஜ் மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியா்களின் சேவையைப் பாராட்டும் வகையில், அவா்களுக்கு என்95 முகக் கவசங்கள், நெகிழி முகத் தடுப்புகள் மற்றும் சுகாதாரப் பொருள்கள் அடங்கிய தொகுப்பு புதன்கிழமை வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் சிதம்பரம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் அசோக்பாஸ்கா் தலைமை வகித்து, வாழ்த்துரை வழங்கினாா். ரெட் கிராஸ் சொசைட்டி செயலா் கே.ஜி.நடராஜன், பொருளாளா் கமல் கோத்தாரி, உறுப்பினா் தீபக்குமாா் ஜெயின் ஆகியோா் முகக் கவசம், சுகாதாரப் பொருள்கள் அடங்கிய தொகுப்பை தலைமைச் செவிலியா்கள் ஜீவா, சொா்ணம் மற்றும் அனைத்து செவிலியா்களுக்கும் வழங்கியதுடன், அவா்களுக்கு செவிலியா் தின வாழ்த்துகளையும் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com