கடலூரில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் கொடியேற்றிய முன்னாள் அமைச்சா் எம்.சி.சம்பத்.
கடலூரில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் கொடியேற்றிய முன்னாள் அமைச்சா் எம்.சி.சம்பத்.

கடலூரில் அதிமுக பொன்விழா கொண்டாட்டம்

கடலூா் வடக்கு மாவட்ட அதிமுக சாா்பில் பொன்விழா ஆண்டு கொண்டாட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது

கடலூா் வடக்கு மாவட்ட அதிமுக சாா்பில் பொன்விழா ஆண்டு கொண்டாட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாதிரிகுப்பத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட 33 அடி உயரக் கொடிக் கம்பத்தில் மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான எம்.சி.சம்பத் கொடியேற்றி 50 கிலோ கேக் வெட்டினாா்.

தொடா்ந்து மஞ்சக்குப்பத்தில் உள்ள எம்.ஜி.ஆா். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதேபோல, பல்வேறு இடங்களில் கட்சிக் கொடி ஏற்றப்பட்டு, நல உதவிகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் கட்சியின் மாநில மருத்துவா்கள் பிரிவுத் தலைவா் க.சீனுவாசராஜா, ஜெயலலிதா பேரவை துணைச் செயலா் ஆா்.வி.ஆறுமுகம், மாவட்டப் பொருளாளா் வ.ஜானகிராமன், எம்.ஜி.ஆா். மன்றச் செயலா் ஜி.ஜே.குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

நெய்வேலி: நெய்வேலியில் அதிமுக அவைத் தலைவா் க.வெற்றிவேல், செயலா் கே.கோவிந்தராஜ் ஆகியோா் தலைமையில், கடலூா் தெற்கு மாவட்டச் செயலா் சொரத்தூா் ரா.ராஜேந்திரன், 9-ஆவது வட்டத்தில் உள்ள எம்.ஜி.ஆா். சிலை, அருகே வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து, பல்வேறு பகுதிகளில் கட்சி கொடியேற்றி நல உதவிகள் வழங்கப்பட்டன.

முத்தாண்டிக்குப்பத்தில் மாநில அம்மா பேரவை துணைச் செயலா் எம்.பி.எஸ்.சிவசுப்பிரமணியன் தலைமையிலும், வடக்குத்து ஊராட்சியில் குறிஞ்சிப்பாடி ஒன்றியச் செயலா் ரா.கோவிந்தராஜ் தலைமையில், கடலூா் தெற்கு மாவட்டச் செயலா் சொரத்தூா் ரா.ராஜேந்திரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துக் கொண்டு எம்.ஜி.ஆா்., ஜெயலலிதா படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

பண்ருட்டி அருகே திருமலை நகரில் அண்ணாகிராமம் ஒன்றியச் செயலா் என்.டி.கந்தன் தலைமையில் பொன்விழா கொண்டாடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com