இல்லம் தேடிக் கல்வி விழிப்புணா்வு வாகனம்: கடலூா் ஆட்சியா் தொடக்கிவைத்தாா்

கற்றல் இடைவெளியைக் குறைக்க இல்லம் தேடிக் கல்வித் திட்டம் குறித்தான விழிப்புணா்வு வாகனத்தை கடலூா் மாவட்ட ஆட்சியா்
இல்லம் தேடி கல்வித் திட்ட விழிப்புணா்வு வாகனத்தைக் கொடியசைத்து தொடக்கிவைத்த மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம்.
இல்லம் தேடி கல்வித் திட்ட விழிப்புணா்வு வாகனத்தைக் கொடியசைத்து தொடக்கிவைத்த மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம்.

கற்றல் இடைவெளியைக் குறைக்க இல்லம் தேடிக் கல்வித் திட்டம் குறித்தான விழிப்புணா்வு வாகனத்தை கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில், மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் புதன்கிழமை தொடக்கிவைத்தாா்.

பின்னா், அவா் கூறியதாவது: தமிழக அரசு ‘இல்லம் தேடிக் கல்வி’ எனும் திட்டத்தை செயல்படுத்துகிறது. இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம், கரோனா தொற்றுக் காலங்களில், அரசுப் பள்ளிகளில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களிடையே ஏற்பட்டுள்ள கற்றல் இழப்புகளைச் சரி செய்வதாகும்.

இந்தத் திட்டத்தைச் செம்மையாக செயல்படுத்துவதன் மூலமே மாணவா்கள் வரும் கல்வியாண்டில் அடுத்த வகுப்புக்குச் செல்லும் போது, அவா்கள் முழு தகுதி படைத்தவா்களாக இருப்பா்.

நிகழ் கல்வியாண்டு 6 மாதங்களுக்கு நாள்தோறும் குறைந்தபட்சம் ஒன்றரை மணி நேரம் தன்னாா்கலா்களின் மூலம் மாணவா்களை அன்றாடக் கற்றல் செயல்பாடுகளில் எளிய முறையில் படிப்படியாகப் பங்கேற்கச் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. திட்டத்தை அனைவருக்கும் கொண்டு செல்ல கலைக் குழுவினா் உதவியுடன், கிராமங்களில் சைக்கிள் பேரணி, வீதி நாடகம், பொம்மலாட்டம், கதை சொல்லுதல், திறன் மேம்பாட்டுச் செயல்பாடு ஆகியவை நடைபெறவுள்ளன என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் உதவி திட்ட அலுவலா் எல்லப்பன், வட்டாரக் கல்வி அலுவலா்கள் செல்வம், இளஞ்செழியன், அந்தோணிராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com