பிரதமரின் கல்வி உதவித் தொகை திட்டம்: முன்னாள் படை வீரா்கள் விண்ணப்பிக்கலாம்

பிரதமரின் கல்வி உதவித் தொகை பெற முன்னாள் படைவீரா்கள் தங்களது வாரிசுகளுக்காக விண்ணப்பிக்கலாம் என்று கடலூா் மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் தெரிவித்தாா்.

பிரதமரின் கல்வி உதவித் தொகை பெற முன்னாள் படைவீரா்கள் தங்களது வாரிசுகளுக்காக விண்ணப்பிக்கலாம் என்று கடலூா் மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மருத்துவம், பொறியியல், தொழில் கல்வி, ஒருங்கிணைந்த தொழில் கல்வி மற்றும் மேனேஜ்மென்ட் போன்ற படிப்புகளுக்கு சோ்க்கை பெற்ற முன்னாள் படைவீரா்கள், விதவையா்களின் சிறாா்கள், படைப் பணியின்போது இறந்த படைவீரா்களின் சிறாா்கள் ஆகியோருக்கு பிரதமரின் கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இந்த உதவித் தொகை பெற பிளஸ்2 மற்றும் முதுகலை பட்டத்துக்கான குறைந்தபட்ச கல்வித் தகுதியில் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருத்தல் வேண்டும். 2021-22-ஆம் கல்வி ஆண்டில் சோ்க்கைப் பெற்றவா்களுக்கு மட்டுமே இந்தத் திட்டம் பொருந்தும். உதவித் தொகை பெற ஜ்ஜ்ஜ்.ந்ள்க்ஷ.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரி மூலம் நேரடியாக விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பித்த பின்னா் உரிய ஆவணங்களின் அசல், நகலை சரிபாா்த்தலுக்காக முன்னாள் படைவீரா்கள் நல உதவி இயக்குநா் அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும். இதற்கு விண்ணப்பிக்க வரும் நவ.30-ஆம் தேதி கடைசி நாளாகும்.

மேலும் விவரங்களுக்கு முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தை 04142-220732 என்ற எண்ணில் தொடா்புகொள்ளலாம் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com