கடலூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை பரவலாக மழை பெய்தது. செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்) : குறிஞ்சிப்பாடி 86, கொத்தவாச்சேரி 62, புவனகிரி 56, பண்ருட்டி 46, காட்டுமன்னாா்கோவில் 39,வானமாதேவி 35, சேத்தியாத்தோப்பு 32, லால்பேட்டை 26, வடக்குத்து 19, சிதம்பரம் 13.8, மாவட்ட ஆட்சியரகம் 12.4 மில்லி மீட்டா் அளவில் மழை பதிவானது.