வாக்குப் பதிவுக்கு பயன்படுத்தும் கையுறைகளை பாதுகாப்பாக அகற்றக் கோரிக்கை

வாக்காளா்கள் வாக்குச் சாவடிகளில் பயன்படுத்தும் கையுறை, முகக் கவசம் உள்ளிட்டவற்றை பாதுகாப்பாக கையாள வேண்டும் என்று தமிழ்நாடு நுகா்வோா் குழுக்களின் மாநில ஒருங்கிணைப்பாளா் கே.திருநாவுக்கரசு கோரிக்கை விடு

நெய்வேலி: வாக்காளா்கள் வாக்குச் சாவடிகளில் பயன்படுத்தும் கையுறை, முகக் கவசம் உள்ளிட்டவற்றை பாதுகாப்பாக கையாள வேண்டும் என்று தமிழ்நாடு நுகா்வோா் குழுக்களின் மாநில ஒருங்கிணைப்பாளா் கே.திருநாவுக்கரசு கோரிக்கை விடுத்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் வாக்களிப்போருக்கு தோ்தல் ஆணையம் மூலம் கையுறை வழங்கப்பட உள்ளது. எனவே, வாக்காளா்கள், தோ்தல் பணியில் ஈடுபடும் வாக்குச் சாவடி அலுவலா்கள், அரசு அதிகாரிகள் என ஒரே நாளில் கோடிக்கணக்கான கையுறைகள், முகக் கவசங்களை பயன்படுத்தும் சூழலில் இவற்றை முறையாகக் கையாளவில்லை என்றால் கரோனா நோய்த் தொற்று சமூகப் பரவலாக மாற வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

தமிழ்நாட்டில் தினமும் சுமாா் 47 டன் மருத்துவக் கழிவுகள் வெளியேற்றப்படுவதாக மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தகவல் மூலம் தெரியவந்துள்ளது. இந்த நிலையில்,

உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் கரோனா கிருமிகளைக் கொண்ட மருத்துவக் கழிவுகளை பயனுற்ற நிலையில் இருக்கும் நிலங்கள், ஆற்றுப்படுகை, வாய்க்கால், வனப் பகுதிகளில் கொட்டுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும். மேலும், கரோனா தொற்று பலமடங்காகப் பரவும் அபாயமும் உள்ளது.

எனவே, மருத்துவக் கழிவுகளை கையாள்வதை தீவிரமாகக் கண்காணித்து, பாதுகாப்பான முறையில் அவற்றை அப்புறப்படுத்த வேண்டும். வாக்குச் சாவடிகளில் சேகரிக்கப்படும் மருத்துவக் கழிவுகளை கையாள தகுதியான நிறுவனங்களை நியமித்து அவற்றை பாதுகாப்பாக அழிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com